UPDATED : மார் 11, 2025 10:39 AM
ADDED : மார் 11, 2025 10:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களால், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையேயான செலவின ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து குறைந்து வருவதாக, மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட 2023-24ம் ஆண்டுக்கான குடும்பங்களின் நுகர்வு செலவின அறிக்கையை சுட்டிக்காட்டி பேசிய அவர், கடந்த 2022-23ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நாடு முழுதும் மக்களின் செலவு செய்யும் திறன் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.