தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ தீபத்துாணும், 'தினமலர்' நாளிதழும்!

 தீபத்துாணும், 'தினமலர்' நாளிதழும்!

 தீபத்துாணும், 'தினமலர்' நாளிதழும்!


UPDATED : ஜன 07, 2026 11:42 AM

ADDED : ஜன 07, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 07, 2026 11:42 AM ADDED : ஜன 07, 2026 05:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில், 'அது நில அ ளவைக்கல்' என தி.மு.க., - எம்.பி.,யும், சட்டசபை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான கனிமொழி கூறினார். இதே கருத்தை தமிழக அரசும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கின்போது நீதிபதிகளிடம் தெரிவித்தது.

Image 1518233

அப்போது, 'நில அளவைக்கல்' என்ற ஆதாரமற்ற கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆகம நிபுணரும் வழக்கறிஞருமான சங்கரனின் பிரத்யேக பேட்டியுடன், 'தினமலர்' நாளிதழ், டிச., 9ல் ஒரு செய்தி வெளியிட்டது.

அதில், தீபத்துாண் குறித்து தமிழக தொல்லியல் துறை 1981ல் வெளியிட்ட நுாலில், குன்றத்து கோயில் என குறிப்பிடப்பட்ட பகுதியில் சொல்லப்பட்டிருந்ததை, 'தினமலர்' ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியது.

இதன் மூலம், தி.மு.க.,வினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கூறியது போல், அது நில அளவைக்கல் அல்ல; தீபத்துாண்தான் என்று வலியுறுத்தப்பட்டது. நீதிமன்ற விசாரணையின்போது ஹிந்து அமைப்பினர் இதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தனர். இதன் பிறகும் நில அளவைக்கல்தான் என்பதில் தமிழக அரசு உறுதியாக நின்றது.

இதனால், 'தினமலர்' நாளிதழ் அதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. அப்போது, உயர் நீதிமன்ற மதுரை வழக்கறிஞர் தங்கபாண்டியன், நில அளவைக்கல் எப்படி இருக்கும் என ஆய்வு செய்தது குறித்து டிச., 10ல், 'திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்துாண் தான். அரசு பதிவேடுகளில் நில அளவைக்கல் குறித்த தகவல் இல்லை' என தலைப்பிட்டு, 'தினமலர்' நாளிதழ் செய்தி வெளியிட்டது.

அந்த செய்தியில் நில அளவைக்கல் எப்படி இருக்கும்; தீபத்துாண் எப்படி இருக்கும்-, வேறுபாடு என்ன என்று விரிவாக சுட்டிக்காட்டப்பட்டது. இதன் பின் அரசின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு, 'அது நில அளவைக்கல் அல்ல' என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இப்படி தீபத்துாணை, 'தீபத்துாண் தான்' என ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது, 'தினமலர்' நாளிதழ். தற்போது உயர் நீதிமன்றமும் அதில் தீபம் ஏற்ற உத்தரவிட்டு பக்தர்களின் மனதில் பால்வார்த்துள்ளது.

நாயக்கர் காலத்து தீபத்துாண்; தமிழக தொல்லியல் துறை ஒப்புதல்

'குன்றத்து கோயில்' நுாலை, 1981ல் தமிழ்நாடு அரசின் தொல்லி யல் துறை வெளியிட்டது. அதில், 129ம் பக்கத்தில், தீபத்துாண் என்ற தலைப்பில் 'மலையடிவாரத்தில் இருந்து மலைக்கு சென்றால் தீபத் துாண் இருப்பதை காணலாம். இத்துாண் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. நாயக்கர் காலத்து கல் வெட்டும் தூணிலேயே எழுதப் பட்டுள்ளது.
இந்த தீபாத்துதூணில் புண்ணியவான்கள் அனைவரும் விளக்கேற்றலாம். இத்துாணில் கார்த் திகை தோறும் ஊர் மக்கள் விளக் கேற்றி வந்தனர்' என, நுாலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். -தி.மு.க., எம்.பி., கனிமொழி உட்பட பலரும் செவி வழி செய் திகளை கேட்டு, தீபத்தூணை 'நில அளவைக்கல்' என்று கூறி வருவது முற்றிலும் தவறு என்பதை தொல்லி யல் துறை நுால் உறுதி செய்கிறது. 'தினமலர்' நாளிதழில் 9.12.2025ம் தேதி வெளியான செய்தி.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us