தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ டில்லி உஷ்ஷ்ஷ்: விஜய்க்கு பா.ஜ., ஆதரவு?

டில்லி உஷ்ஷ்ஷ்: விஜய்க்கு பா.ஜ., ஆதரவு?

டில்லி உஷ்ஷ்ஷ்: விஜய்க்கு பா.ஜ., ஆதரவு?


ADDED : நவ 03, 2024 12:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 03, 2024 12:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை, பிரமாண்டமாக நடத்திக் காட்டி விட்டார் நடிகர் விஜய். 'தி.மு.க.,வும் பா.ஜ.,வும் என் எதிரி' என சொன்னாலும், தி.மு.க.,வைத் தான் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

'வரும் 2026ல், தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு நிச்சயம் உண்டு' என, தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகளுக்கு துாண்டில் போட்டுஉள்ளார் விஜய்.

இந்நிலையில், விஜய் கட்சி குறித்து பா.ஜ., தலைமையின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பா.ஜ., ஆலோசனை நடத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.

'தி.மு.க.,விற்கு எதிராக அரசியல் செய்யும் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிக்க வேண்டும்; தி.மு.க.,வை ஒழிக்க வேண்டும். அதே நேரத்தில், அ.தி.மு.க.,வும் கலைந்து போக வேண்டும். எனவே, பா.ஜ.,வை விஜய் கடுமையாக விமர்சனம் செய்தாலும், பா.ஜ., தலைவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். விஜய்க்கு எதிராக எதுவும் பேசக் கூடாது' என, கட்சி தலைமை தற்போது முடிவெடுத்து உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால், இப்போது பா.ஜ.,வின் முக்கிய குறிக்கோள், மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்கள் தான்; எனவே, அதில் மும்முரமாக இறங்கியுள்ளனர் தலைவர்கள். 'இம்மாதம் 23ம் தேதி, இந்த இரண்டு மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகும். அதற்குள், த.வெ.க., தொடர்பாக கட்சி மேலிடம் ஒரு இறுதி முடிவை எடுக்கும்' என்கின்றனர் டில்லி பா.ஜ., தலைவர்கள்.

அத்துடன், ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு சென்றுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இம்மாத இறுதியில் தாயகம் திரும்புகிறார். விஜய் கட்சி விவகாரத்தில், தமிழக பா.ஜ., எப்படி செயல்பட வேண்டும் என, அண்ணாமலைக்கு பா.ஜ., தலைமை தன் முடிவை தெரிவிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us