டில்லி உஷ்ஷ்ஷ்: பிரியங்காவிற்கு எதிராக ஒரு தமிழ் பெண்மணி!
டில்லி உஷ்ஷ்ஷ்: பிரியங்காவிற்கு எதிராக ஒரு தமிழ் பெண்மணி!
ADDED : அக் 27, 2024 02:54 AM

வயநாடு: கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துவிட்டார் பிரியங்கா. இவருக்கு எதிராக சி.பி.எம்., சார்பில் சத்யன், பா.ஜ., சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர்.
இவர்களைத் தவிர ஒரு தமிழ் பெண்மணியும் பிரியங்காவை எதிர்த்து போட்டியிடுகிறார். அவர் ஒரு தமிழ் சீக்கிய பெண்மணி; பெயர் சீதா கவுர். சீக்கிய உடையில், நீல நிற தலைப் பாகையுடன் வலம் வருகிறார்; 52 வயதாகும் இவருக்கு இரண்டு குழந்தைகள். பகுஜன் திராவிட கட்சியைச் சேர்ந்தவர் சீதா. பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கான்ஷிராமின் கொள்கைகளை பின்பற்றும் இந்த கட்சியின் நோக்கம், பட்டியலின மக்களின் முன்னேற்றம்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டவர் சீதா. இவருடைய கணவர் ராஜன் சிங், கன்னியாகுமரியில் போட்டி யிட்டார். இந்த கட்சியின் தலைவர், ஜீவன் சிங் மில்கா; உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்.