தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/டில்லி உஷ்ஷ்ஷ்: நெருக்கடியில் கெஜ்ரிவால்!

டில்லி உஷ்ஷ்ஷ்: நெருக்கடியில் கெஜ்ரிவால்!

டில்லி உஷ்ஷ்ஷ்: நெருக்கடியில் கெஜ்ரிவால்!


UPDATED : மே 19, 2024 03:31 AM

ADDED : மே 19, 2024 12:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 19, 2024 03:31 AM ADDED : மே 19, 2024 12:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜூன் 1ம் தேதி வரை ஜாமினில் வெளிவந்துள்ளார், டில்லி முதல்வர் கெஜ்ரிவால். 'லோக்சபா தேர்தலில் சாதகமாக அனுதாப அலை வீசும்; மோடியை தோற்கடித்து விடலாம்' என, நினைத்திருந்தார்; ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. இவருடைய கட்சியை சேர்ந்த ஒரு பெண்மணியால் பிரச்னை. டில்லி அரசியல் வட்டாரங்களில் இந்த விவகாரம் பற்றிக் கொண்டுவிட்டது. 'டிவி'க்கள் இந்த விவகாரத்தை பெரிதாக்கி விட்டன.

ஸ்வாதி மாலிவால் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., அத்துடன், டில்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும் கூட. சிறையிலிருந்து வெளிவந்த கெஜ்ரிவாலை இவர் சந்திக்க சென்ற போது, கெஜ்ரிவாலின் உதவியாளர் இவரை கடுமையாக தாக்கினார். தற்போது, இந்த விவகாரத்தை, டில்லி போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் நொந்து போயுள்ளனர். அவர்கள் கூறுவது இதுதான்... மாலிவாலும், கெஜ்ரிவாலும் நெருக்கமான நண்பர்கள்; இது, முதல்வரின் மனைவி சுனிதாவிற்கு பிடிக்கவில்லை. இதனால், முதல்வரின் செயலரை விட்டு மாலிவாலை அடிக்க சொன்னாராம் சுனிதா.

முதலில் செயலர் தாக்கினார் என்பதை ஒத்துக் கொண்ட கெஜ்ரிவால், தற்போது தன் கட்சி தலைவர்கள் வாயிலாக, மாலிவாலின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் கருத்துகளை தெரிவித்து வருகிறார். 'பா.ஜ.,வின் ஏஜென்ட் ஆகிவிட்டார் ஸ்வாதி' என, குற்றம்சாட்டுகிறது ஆம் ஆத்மி கட்சி. இவர் தாக்கப்படவில்லை என, ஒரு வீடியோவை கட்சி வெளியிட்டுள்ளது; ஆனால், முதல்வரின் வரவேற்பு அறையில் சிசிடிவி கிடையாது.

கடந்த 2018ல் டில்லி அரசின் தலைமை செயலர் இப்படித்தான் முதல்வர் வீட்டில் தாக்கப்பட்டார். அப்போது, 'இது பொய்... வரவேற்பறையில் சிசிடிவி கிடையாது' என கெஜ்ரிவால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கெஜ்ரிவால் தான், தன்னை தாக்க சொன்னார் என, மாலிவால் கூறியிருக்கிறார். ஆனால் எப்.ஐ.ஆரில் அப்படி குறிப்பிடவில்லை. ஒரு பெண்மணி, அதுவும் ஒரு அரசியல்வாதி மீது அடிதடி என்றால், சக கட்சி தலைவர்கள் பொங்கி விடுவர். ஆனால், மாலிவால் விவகாரத்தில் தி.மு.க., உட்பட அனைவருமே வாய் திறக்கவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us