ADDED : அக் 06, 2024 01:13 AM

புதுடில்லி: ஹரியானா சட்டசபை தேர்தல் முடிந்து விட்டது; வரும் 8ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படும். '10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.,வை எப்படியும் வெளியேற்றி விடுவோம்; இந்த தேர்தலில் அது நடக்கும்' என தீவிரமாக நம்புகின்றனர், காங்., தலைவர்களும், தொண்டர்களும்.
'கள நிலவரப்படி நாங்கள்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்' என, ஹரியானா காங்., தலைவர்கள், இப்போதே வெற்றி விழாவிற்கு தயாராகி விட்டனர். பா.ஜ.,வில் உட்கட்சி பூசல், அதிருப்தியாளர்கள் என, பல பிரச்னைகள் உள்ளன; இதனால் மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினம்.
ஆனால், இன்னொரு மாநில கட்சி தலைவரான சவுதாலாவோ, 'எந்த ஒரு கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. அப்படி எந்த ஒரு கட்சிக்கும் ஆட்சி அமைக்க போதிய மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் பா.ஜ., புகுந்து விளையாடும். உள்துறை அமைச்சர் அமித் ஷா களத்தில் இறங்கி விடுவார்; இந்த நிலையில் பா.ஜ., ஆட்சி அமைக்கும்' என, அடித்து சொல்கிறார்.