ADDED : டிச 22, 2024 02:35 AM

புதுடில்லி: ஒரே நாடு; ஒரே தேர்தல் தொடர்பான மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது; இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. 'இந்த மசோதாவை பார்லிமென்ட் கூட்டுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்' என பா.ஜ., சொன்னது. தி.மு.க., - எம்.பி., டி.ஆர். பாலுவும் இதை ஆமோதித்து, 'கூட்டுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்' என கூறியது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது.
'தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்க, ஏன் பாலு இப்படி கூறினார்' என தி.மு.க., - எம்.பி.,க்கள் குழம்பிவிட்டனர். ஆனால் கனிமொழி, 'தி.மு.க., இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறது; மசோதாவை வாபஸ் வாங்குங்கள்' என, கடுமையாக பேசினார். 'ஏற்கனவே தமிழக சட்டசபை, ஒரே நாடு; ஒரே தேர்தலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், ஏன் பாலு இப்படி சொதப்பி விட்டார்?' என எம்.பி.,க்கள் மத்தியில் பேசப்பட்டது.
'தி.மு.க., தலைவர் கருணாநிதி ஒரே நாடு; ஒரே தேர்தலை ஆதரித்துள்ளார். எப்படி தி.மு.க., தன் நிலைப்பாட்டை மாற்ற முடியும்?' என பா.ஜ.,வினர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், வழக்கம் போல தி.மு.க., வாய் மூடி அமைதியாக உள்ளது. இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம்... சீனியர் வழக்கறிஞராக புகழ் பெற்ற, முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம், ராஜ்யசபாவில் அரசியல் அமைப்பு குறித்த விவாதத்தில் பங்கேற்று பேசுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்; ஆனால் அவருக்கு பேச காங்., வாய்ப்பு தரவில்லை.