sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

டில்லி உஷ்ஷ்ஷ்: ராகுலுக்கு முக்கியத்துவம்?

/

டில்லி உஷ்ஷ்ஷ்: ராகுலுக்கு முக்கியத்துவம்?

டில்லி உஷ்ஷ்ஷ்: ராகுலுக்கு முக்கியத்துவம்?

டில்லி உஷ்ஷ்ஷ்: ராகுலுக்கு முக்கியத்துவம்?

3


ADDED : டிச 22, 2024 02:18 AM

Google News

ADDED : டிச 22, 2024 02:18 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ராகுலின் சகோதரி பிரியங்கா, கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியிலிருந்து எம்.பி.,யாக வெற்றி பெற்று, முதன் முறையாக எம்.பி.,யாகி உள்ளார். அம்மா, மகள், மகன் என குடும்பமே இப்போது எம்.பி.,யாக உள்ளனர்.

'பிரியங்காவிற்கு சக காங்., - எம்.பி.,க்கள் அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ' என, பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.

ராகுல் எப்போது சபைக்குள் வந்தாலும், உடனே காங்., - எம்.பி.,க்கள் தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்து நின்று வரவேற்கின்றனர். சில காங்., - எம்.பி.,க்கள் பாதி உட்கார்ந்த நிலையிலும், பாதி எழுந்திருக்கும் நிலையிலும் மரியாதை தருகிற மாதிரி ஒரு, 'பாவ்லா' காட்டுகின்றனர்.

அத்துடன், ராகுல் பார்லிமென்டிற்கு வரும்போதும், அவர் வெளியே போகும்போதும் எம்.பி.,க்களான வேணுகோபால், சசி தரூர் மற்றும் மாணிக்கம் தாக்கூர் ஒட்டிக் கொண்டே இருக்கின்றனர்; ஆனால் பிரியங்காவை எந்த எம்.பி., யும் கண்டுகொள்வதில்லை. இதை, பா.ஜ.,வினர் கவனித்து வருகின்றனர். 'ராகுல் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்; அதனால் தான் இந்த மரியாதை' என்கின்றனர் காங்கிரசார்.






      Dinamalar
      Follow us