sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

டில்லி 'உஷ்ஷ்ஷ்... !': விஜய்க்கு பா.ஜ., உதவுகிறதா?

/

டில்லி 'உஷ்ஷ்ஷ்... !': விஜய்க்கு பா.ஜ., உதவுகிறதா?

டில்லி 'உஷ்ஷ்ஷ்... !': விஜய்க்கு பா.ஜ., உதவுகிறதா?

டில்லி 'உஷ்ஷ்ஷ்... !': விஜய்க்கு பா.ஜ., உதவுகிறதா?


ADDED : ஜன 11, 2026 04:16 AM

Google News

ADDED : ஜன 11, 2026 04:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுக்கு வெளியாக வேண்டிய விஜயின் கடைசி படமான, ஜனநாயகன் இப்போது நீதிமன்றத்தில் சிக்கித் தவிக்கிறது. படம், 'ரிலீஸ்' ஆக, சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அளித்த தீர்ப்பை, தலைமை நீதிபதி அமர்வு தடை செய்து, வரும் 21க்கு வழக்கை ஒத்தி வைத்தது.

' ஜனநாயகன் ரிலீஸ் ஆகாததற்கு பா.ஜ., தான் காரணம்' என, காங்., உட்பட எதிர்க்கட்சிகள் அனைத்தும் குற்றஞ்சாட்டி வருகின்றன. 'தமிழக தேர்தலில் அதீத ஆர்வம் காட்டி வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவுப்படி தான், திரைப்படம் ரிலீஸ் தடைபட்டுள்ளது' என்றும், காங்கிரசார் சொல்கின்றனர்.

ஆனால், நிலைமை வேறு மாதிரியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. 'எந்தவொரு படமும் தடை செய்யப்பட்டு, பின் வெளியானால், அந்த படத்திற்கு மவுசு அதிகரிக்கும்; சூப்பர் ஹிட் ஆகவும் வாய்ப்புள்ளது. அதை தான் பா.ஜ., செய்கிறது' என, அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். 'தடைக்கு பின், ஜனநாயகன் வெளியானால், படம் சூப்பர் ஹிட்டாவதுடன், இளைஞர்களையும், பெண்களையும் விஜய் பக்கம் ஒட்டுமொத்தமாக சேர்த்து விடவும் வாய்ப்புள்ளது' என்றும் சொல்லப்படுகிறது.

அ.தி.மு.க., - -பா.ஜ., மற்றும் த.வெ.க., என, மூன்று அணிகள் போட்டியிட்டால், தி.மு.க., தோற்பது நிச்சயம். இந்த தடையால், த.வெ.க., - - காங்., கூட்டணி உருவாகுமா? தமிழக காங்., பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், எம்.பி.,க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோர், 'மோடி அரசு தான், ஜனநாயகன் படம் வெளியாகாமல் தடுக்கிறது' என, புகார் கூறியுள்ளனர்.

'காங்., இவ்வளவு கூப்பாடு போட்டும், த.வெ.க., - காங்., கூட்டணிக்கு வாய்ப்பில்லை; கடைசியில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் சேர்ந்து விடுவார் விஜய்' என, காங்., மூத்த தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், அப்படி நடக்குமா என்றால், 'அரசியலில் எதுவும் நடக்கலாம். 'சாமியார்கள் கட்சி' என, பா.ஜ.,வை கிண்டல் செய்து, பின், அதே பா.ஜ., கூட்டணியில் தி.மு.க., இணைந்து, மத்தியில் தி.மு.க.,வினர் மத்திய அமைச்சர்கள் ஆயினரே... அதை எப்படி மறக்க முடியும்' என்கின்றனர் காங்கிரசார்.






      Dinamalar
      Follow us