ADDED : ஆக 18, 2024 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: சுதந்திர தினத்தன்று, மாலை ஜனாதிபதி மாளிகையில், பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் சில பிரபலங்களுக்கு விருந்து அளிக்கப்படுவது வழக்கம்; இதில், தலைமை நீதிபதி உட்பட பலர் பங்கேற்பர்.
இந்த விருந்தில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுலும் பங்கேற்றார். அப்போது, ஜனாதிபதியுடன் தனியாக, 20 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தாராம் ராகுல்; இது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஜனாதிபதியுடன் என்ன பேசினார் என்பதை தெரிந்துகொள்ள, பா.ஜ.,வினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, முன்னாள் மத்திய அமைச்சரும், அமேதி தொகுதியில் தோற்றவருமான ஸ்மிருதி இரானி மிகவும் ஆவலாக இருக்கிறாராம்.

