sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் சிலைகளில் துளிகூட தங்கமில்லை; பக்தர்கள் அதிர்ச்சி

/

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் சிலைகளில் துளிகூட தங்கமில்லை; பக்தர்கள் அதிர்ச்சி

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் சிலைகளில் துளிகூட தங்கமில்லை; பக்தர்கள் அதிர்ச்சி

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் சிலைகளில் துளிகூட தங்கமில்லை; பக்தர்கள் அதிர்ச்சி

13


ADDED : ஜன 07, 2026 08:29 AM

Google News

ADDED : ஜன 07, 2026 08:29 AM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் புதிய உற்சவர் சிலை செய்ததில் நடந்த தங்க மோசடி வழக்கில், போலீசாரின் திருத்தப்பட்ட எப்.ஐ.ஆர்., மற்றும் ஐ.ஐ.டி., ஆய்வறிக்கை குறித்த விபரம், நீதிமன்றம் வாயிலாக மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சிலைகள் செய்ய பக்தர்களிடம், 312 சவரன் தங்கம் நன்கொடையாக வசூலிக்கப்பட்டதும், புதிதாக தயாரித்த உற்சவர் சிலைகளில், துளி கூட தங்கம் இல்லை என்ற விபரமும் அம்பலமாகி உள்ளதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பயன்பாட்டில் உள்ள உற்சவர் சிலை தொன்மையானது. இச்சிலை, 2015ல் சேதமானதால், புதிதாக சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி ஆகிய இரு உற்சவர் சிலைகளை செய்ய, ஹிந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்தது.

அதன்படி, சோமாஸ்கந்தர் சிலை மற்றும் ஏலவார்குழலி அம்மன் என, இரு உற்சவர் சிலைகள் செய்யப்பட்டன. உற்சவர் சிலை செய்ததில் தங்க மோசடி நடந்திருப்பதாக, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் அளித்த புகாரின்படி, சிவகாஞ்சி போலீசார், 2017ல் வழக்குப்பதிவு செய்தனர்.

குற்றப்பத்திரிக்கை

கோவில் செயல் அலுவலர் முருகேசன், ஸ்தபதி மாசிலாமணி, கோவில் அர்ச்சகர்கள் என, 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு உடனடியாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடந்தது. புதிதாக சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி அம்மன் சிலைகள் செய்தபோது, 5 சதவீதம் தங்கம் சேர்க்க வேண்டும் என்பது விதி. அதாவது, 8.7 கிலோ தங்கம் சேர்த்திருக்க வேண்டும்.

ஆனால், 'இரு புதிய சிலைகளிலும், தங்கம் சேர்க்கப்படவில்லை' என, முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் அழைத்து வந்த ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு செய்ததில் தெரியவந்தது. இவ்வழக்கில், ஹிந்து சமய அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி மற்றும் கூடுதல் கமிஷனர் கவிதா, அர்ச்சகர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, இவ் வழக்கு அடுத்தகட்ட நகர்வு இல்லாமல் முடங்கியது. இதனால், மீண்டும் சிவகாஞ்சி போலீசாரே இவ்வழக்கை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், 2023ல், சிவகாஞ்சி போலீசார் இவ்வழக்கை விசாரித்தனர். அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில், சிவகாஞ்சி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

அதில், கோவில் செயல் அலுவலர் முருகேசன், சிலை செய்த ஸ்தபதி மாசிலாமணி ஆகிய இருவரை நீக்கியும், ஹிந்து சமய அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி, கூடுதல் கமிஷனர் கவிதா ஆகிய இருவரை சேர்த்தும், சிவகாஞ்சி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையே, 2017ல் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, 2023ல் சிவகாஞ்சி போலீசாரால் திருத்தப்பட்டுள்ளது. அந்த திருத்தப்பட்ட நகல், மனுதாரரான அண்ணா மலைக்கு, தற்போது வழங்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், 312 சவரன் தங்கம் பக்தர்களிடமிருந்து பெறப்பட்டதாகவும், ஆனால், ஐ.ஐ.டி., சார்பில் ஆய்வு செய்ததில், துளி தங்கம் கூட இல்லை எனவும், திருத்தப்பட்ட எப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஒத்திவைப்பு

இதன்படி, 468 பிரிவான போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தல், 471 - போலி என்று தெரிந்தும் உண்மை என்று பயன்படுத்துதல் என்ற பிரிவுகள் நீக்கப்பட்டு, 380 (2) என்ற கோவில்களில் சிலைகள் மற்றும் சிலை சார்ந்த பொருட்களை திருடுவது; 34வது பிரிவில், ஒரே நோக்கத்திற்காக பலர் கூட்டாக குற்றச்செயல்களில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இவ்வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் துவங்கியுள்ள நிலையில், 312 சவரன் தங்கம் பக்தர்கள் வழங்கியிருப்பது, போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவ்வழக்கு, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில், கடந்த டிச., 30ம் தேதி, முதன்முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹிந்து சமய அறநிலையத் துறை முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி, கூடுதல் கமிஷனர் கவிதா, ஸ்தபதி முத்தையா, அர்ச்சகர்கள் என, ஒன்பது பேர் ஆஜராகினர். அவர்களிடம் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம், இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் இவ்வழக்கு குறித்து கருத்துக்களை கேட்ட நீதிமன்றம், அடுத்த விசாரணையை, பிப்., 2ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

பக்தர்களிடம் நன்கொடை பெற்ற, 312 சவரன் நகைகளின் தற்போதைய மதிப்பு, 3.12 கோடி ரூபாய்.

ரசீது ஏதும் கிடையாது; வீடியோவும் இல்லை

உற்சவர் சிலை தயாரிப்பு, தங்கம் நன்கொடை தொடர்பாக, தினேஷ் என்ற பக்தர், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகளை கேட்டிருந்தார். இதற்கு கோவில் நிர்வாகம் அளித்த பதிலில், 'கடந்த 2015ம் ஆண்டில் சுவாமிமலையில், மாசிலாமணி என்ற ஸ்தபதியால், புதிய உற்சவர் சிலைகள் செய்யப்பட்டன. சிலை செய்தபோது வீடியோ ஏதும் எடுக்கவில்லை. பக்தர்கள் நன்கொடை வழங்கிய தங்கத்திற்கு ரசீது ஏதும் போடவில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், பக்தர்களிடமிருந்து 312 சவரன் நகைகளை, எந்த அடிப்படையில் அறநிலையத்துறையினர் பெற்றனர் என்ற கேள்வி எழுகிறது.








      Dinamalar
      Follow us