தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/திருமணம் கைகூடவில்லையா? கட்டிய பணம் வாபஸ் ஆகும்

திருமணம் கைகூடவில்லையா? கட்டிய பணம் வாபஸ் ஆகும்

திருமணம் கைகூடவில்லையா? கட்டிய பணம் வாபஸ் ஆகும்


UPDATED : நவ 11, 2026 02:26 PM

ADDED : நவ 11, 2026 05:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 02:26 PM ADDED : நவ 11, 2026 05:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாகா மக்கள் மண்டை ஓடு ஒப்படைத்தது மியூசியம்


நாகாலாந்து மக்களின் கலாசாரம் தொடர்பான 6,000 பொருட்கள் பிரிட்டன் ஆக்ஸ்போர்டு அருங்காட்சியகத்தில் உள்ளன. மானுட ஆராய்ச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட, 39 நாகர்களின் மண்டை ஓடுகளும் அதில் இருந்தன. இவை, 1910 முதல் 1940 வரையிலான காலத்தில், இந்தியாவில் அதிகாரிகளாக பணியாற்றிய மானுடவியல் அறிஞர்களால் கொண்டு செல்லப்பட்டவை. அவற்றை நாகா மாநில பிரதிநிதிகள் 30 பேரிடம் அருங்காட்சியக நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர். தங்கள் முன்னோர் மண்டை ஓடுகளை திரும்பப் பெறுவதற்காக போராடிய நாகா தலைவர்களில் ஒருவரான தேஜோ விஹின்யோ, 'நாங்கள் அவற்றை மரியாதைக்குரிய வகையில் அடக்கம் செய்வோம்' என்றார்.

ரொனால்டோவின் வீடு; ரசிகர்களுக்கு ஆர்வம்


உத்தரகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த மாலுமி சஹில் அக்ரம். கடல் வழியாக வெவ்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர். போர்ச்சுக்கல் சென்ற அவர், கப்பலில் நின்று கொண்டு, 'கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவின் வீடு இதுதான்' என்று காட்டினார். அவர் காட்டிய கடற்கரையோர பகுதியில் ஒரு சில வீடுகளே இருந்தன. அவற்றில் ஆரஞ்ச் நிற வீடு தான் ரொனால்டோவின் வீடு என்று அவர் கூறும் வீடியோவை 60 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

திருமணம் கைகூடவில்லையா? கட்டிய பணம் வாபஸ் ஆகும்


திருமண வரன் பார்க்கும் தொழிலுக்கு உலகம் முழுவதுமே நல்ல டிமாண்ட் இருக்கிறது. சீனாவில் திருமண வரன் பார்க்க வசதியாக, ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல் செயலிகள் நிறைய இருக்கின்றன. 'லியாங்பெய்' என்ற ஒரு மொபைல் 'டேட்டிங்' செயலிக்கு கட்டணம், இந்திய மதிப்பில் 28 ஆயிரம் ரூபாய். மூன்று ஆண்டு ஆகியும் திருமணம் கைகூடவில்லை என்றால், கட்டிய பணம் மொத்தமும் திருப்பித் தருவோம் என்கிறது அந்த நிறுவனம். சீனாவில் இத்தகைய ஆன்லைன் டேட்டிங் செயலிகளை 28 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இதன் சந்தை மதிப்பு 31 ஆயிரம் கோடி ரூபாய் என்கின்றனர், ஆய்வாளர்கள்.

கல் வீசும் திருவிழாவில் ஹிமாச்சல் மக்கள் உற்சாகம்


ஹிமாச்சல் மாநிலம், சிம்லா அருகே தாமி கிராமத்தில் தீபாவளிக்கு மறுநாள் நடக்கும் விழா, பிரசித்தி பெற்றது. கிராமத்தினர் 2 பிரிவாக பிரிந்து, ஒருவர் மீது மற்றொருவர் கற்களை வீசி தாக்கிக்கொள்வர். இந்தாண்டு விழாவை, பல்லாயிரக்கணக்கானோர் கூடி ரசித்தனர். கல் வீசுவோரை கண்டு சிலர் ஓடுவதும், சிலர் துரத்துவதுமாக வேடிக்கையாக விழா நடந்தது. கல் வீச்சில் யாரேனும் ஒருவர் காயம் அடைந்தால், காயத்தில் இருந்து வரும் ரத்தத்தை சேகரித்து பத்ரகாளி அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துவது இங்கு வழக்கம். பல நுாறு ஆண்டுக்கு முன், மனிதர்கள் தங்களை தாங்களே பலியிட்ட நிகழ்வுக்கு மாற்றாக இப்படி ஒரு சடங்கு தொடங்கியதாக சொல்கின்றனர் கிராமத்தினர்.

காப்பாற்றியது மஹிந்திரா; காரில் பயணித்தவர் உருக்கம்


மும்பை - புனே விரைவு சாலையில் சென்ற, 'மஹிந்திரா எக்ஸ்யுவி300' கார் மீது, பின்னால் இருந்து வந்த வாகனம் மோதியது. இதில், இரு முறை உருண்டு சாலைத்தடுப்பில் மோதியபோதும், காரில் சென்ற குடும்பத்தினர் அனைவரும் உயிர் தப்பினர்.

மஹிந்திரா காரில் பயணித்த ரோஷிணி ஸ்வாடியா, 'நாங்கள் சென்ற கார் விபத்தில் சிக்கியது. வாகனத்தின் தரம், கட்டமைப்பு, வலிமை, பாதுகாப்பு அம்சங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை இந்த சம்பவம் எங்களுக்கு உணர்த்தியது. குழந்தையுடன் சென்ற நாங்கள் அனைவரும் லேசான காயத்துடன் தப்பி விட்டோம். நம் உயிரை காப்பாற்றும்போது தான், அந்த பொருளின் உண்மையான மதிப்பே நமக்குப் புரியும். எங்கள் உயிரை காப்பாற்றியது மஹிந்திரா கார் தான்' என்றார். அவரது உருக்கமான பதிவு, வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us