ADDED : ஆக 25, 2024 03:43 AM

வெளிநாட்டு பயணமாக, போலந்து சென்றிருந்தார் பிரதமர் மோடி. பின், அங்கிருந்து குண்டு துளைக்காத ரயிலில், உக்ரைன் சென்றார்.
ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு ஏகப்பட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பது, எஸ்.பி.ஜி., என்கிற அதிரடி அமைப்பு.
எப்படி மோடிக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்பது குறித்து, ஒரு வீடியோவை எஸ்.பி.ஜி., தயாரித்துள்ளதாம். உலக அளவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அடுத்தபடியாக, பிரதமர் மோடிக்கு தான் அதிக செக்யூரிட்டி அளிக்கப்படுகிறதாம். எஸ்.பி.ஜி., அமைப்பிலிருந்து, 70 பேர் உக்ரைன் சென்று மோடிக்கு பாதுகாப்பு அளித்தனராம்.
இவர்கள், ஏறக்குறைய ஒரு எலக்ட்ரானிக் சுவரையே எழுப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது. குண்டோ அல்லது கெமிக்கல் போர் என சொல்லக் கூடிய, விஷ வாயுக்களோ என, எந்த தாக்குதல் நடந்தாலும், அது மோடியை பாதிக்காத வண்ணம் பாதுகாப்பு அளிக்கப்பட்டதாம்.

