ஹெச்.எம்.,களுக்கு விருது பரிந்துரைக்க மாவட்ட குழு
ஹெச்.எம்.,களுக்கு விருது பரிந்துரைக்க மாவட்ட குழு
UPDATED : ஏப் 06, 2025 02:20 AM
ADDED : ஏப் 06, 2025 12:56 AM

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களில், சிறப்பாக செயல்படுவோருக்கு, அறிஞர் அண்ணா தலைமை பண்புக்கான சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுக்கு தகுதியான தலைமை ஆசிரியர்களை தேர்வு செய்வது குறித்த வழிகாட்டுதலை, பள்ளி கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் அமைக்கப்படும் மாவட்ட தேர்வு குழுவினர், பள்ளிகளில் ஆய்வு செய்து, பள்ளி கட்டமைப்பு, கல்வி செயல்பாடு, அதன் இணை செயல்பாடுகள் அடிப்படையில், சிறந்த தலைமை ஆசிரியர்களை தேர்வு செய்து, மாநில தேர்வு குழுவுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
எக்காரணம் கொண்டும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளவர்களை, ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை பெற்றவர்களை, குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை பரிந்துரைக்கக்கூடாது என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

