UPDATED : ஜன 21, 2024 01:58 AM
ADDED : ஜன 21, 2024 01:53 AM

எதிர்க்கட்சிகளின்
கூட்டணி, லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீட்டிற்கான பேச்சை ஆரம்பித்து
விட்டது. இந்த கூட்டணியில் உள்ள, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்.,
தலைவருமான மம்தா பானர்ஜி, தன் மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுகளிலும்
போட்டியிட விரும்புகிறார். அதிகபட்சம் காங்கிரசுக்கு இரண்டு தொகுதிகள்
ஒதுக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தி.மு.க.,
தலைவர் ஸ்டாலினுடன், மம்தா தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது.
'காங்கிரசை அதிகமாக நம்ப வேண்டாம். மாநில கட்சிகளை காங்., மதிக்காமல் பெரிய
அண்ணன் போல செயல்படுகிறது.
'எனவே, தொகுதி பங்கீட்டில் நீங்கள்
கவனமாக இருக்க வேண்டும். தவிர, காங்கிரசுடன் அதிக நெருக்கம் காட்டாதீர்கள்'
என, போனில் பேசியுள்ளதாக திரிணமுல் தரப்பில் சொல்லப்படுகிறது.
தான்
தொலைபேசியில் பேசியதை, பத்திரிகை செய்தியாக மம்தா வெளியிட்டார்; இது,
மேற்கு வங்க பத்திரிகைகளில் வெளியானது. 'ஏன் தமிழகத்தில் இந்த செய்தி
வெளிவரவில்லை; ராகுலுடன், ஸ்டாலின் நெருக்கமாக இருப்பதால் இந்த செய்தியை
இருட்டடிப்பு செய்து விட்டாரா' என, கேட்கிறாராம் மம்தா.

