sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தொகுதி உடன்பாட்டை இறுதி செய்ய தமிழக காங்கிரசுக்கு தி.மு.க., 'கெடு'

/

தொகுதி உடன்பாட்டை இறுதி செய்ய தமிழக காங்கிரசுக்கு தி.மு.க., 'கெடு'

தொகுதி உடன்பாட்டை இறுதி செய்ய தமிழக காங்கிரசுக்கு தி.மு.க., 'கெடு'

தொகுதி உடன்பாட்டை இறுதி செய்ய தமிழக காங்கிரசுக்கு தி.மு.க., 'கெடு'


UPDATED : பிப் 28, 2024 05:18 AM

ADDED : பிப் 27, 2024 10:48 PM

Google News

UPDATED : பிப் 28, 2024 05:18 AM ADDED : பிப் 27, 2024 10:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தமிழக காங்கிரசுக்கு ஆறு தொகுதி, புதுச்சேரி காங்கிரசுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும்' என, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமாரிடம், தி.மு.க., மேலிடம் தெரிவித்துள்ளது. மேலும், நாளைக்குள் காங்கிரஸ் தொகுதி எண்ணிக்கையை இறுதி செய்ய வேண்டும் என்றும், கெடு விதித்துள்ளது.

தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்டவை இடம் பெற்று உள்ளன.

இந்த கட்சிகளுடன் ஏற்கனவே தொகுதி பங்கீடு எண்ணிக்கை குறித்து, தி.மு.க., தரப்பில் இரண்டு கட்ட பேச்சு நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.

அதன் அடிப்படையில், ராமநாதபுரம் தொகுதி முஸ்லிம் லீக் கட்சிக்கும், நாமக்கல் தொகுதி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

15 தொகுதிகள்


காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு, மார்ச் 3ம் தேதி வரை நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஆனால், நாளைக்குள் தொகுதி பங்கீடு எண்ணிக்கை குறித்து, காங்கிரஸ் இறுதி செய்ய வேண்டும் என, தி.மு.க., தரப்பில் கெடு விதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவராக அழகிரி இருந்த போது, தி.மு.க.,விடம், 12 தொகுதிகள் பட்டியல் வழங்கப்பட்டது. அழகிரி மாற்றப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக மூன்று தனித் தொகுதிகள் என, மொத்தம் 15 தொகுதிகளை கேட்க, தமிழக காங்கிரஸ் விரும்புகிறது.

காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் அஜோய்குமார், ஸ்ரீவல்லபிரசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், டில்லியில் நடந்தது.

தமிழக காங்கிரசுக்கு, ஆறு தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் சேர்த்து, மொத்தம் ஏழு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என, தி.மு.க., குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்ததாக, அஜோய்குமார் கூறியுள்ளார்.

விருப்பம்


திருவள்ளூர், ஆரணி, கரூர், விருதுநகர் உள்ளிட்ட தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய முடியாது.

அதற்கு பதிலாக வேறு தொகுதிகளை தரவும் தி.மு.க., முன்வந்துள்ளது. 'சிட்டிங்' எம்.பி.,க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டால், அதிருப்தி ஏற்பட்டு, சிலர் பா.ஜ.,விற்கு ஓட்டம் பிடிக்க வாய்ப்பு உண்டு என்பதால், மீண்டும் அதே தொகுதிகளை தி.மு.க.,விடம் கேட்டு பெற, காங்கிரஸ் விரும்புகிறது.

காங்கிரசிடம் பறிக்கப்படும் தொகுதிகளை, மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க., அல்லது மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய, தி.மு.க., திட்டமிட்டுள்ளது.

நாளை, தி.மு.க., காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாட்டை முடித்து, மார்ச் 1ல், முதல்வர் ஸ்டாலின் 71வது பிறந்த நாளை ஒட்டி அறிவிக்க தி.மு.க., முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us