sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்த்து காங்கிரசுக்கு தி.மு.க., 'செக்'

/

தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்த்து காங்கிரசுக்கு தி.மு.க., 'செக்'

தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்த்து காங்கிரசுக்கு தி.மு.க., 'செக்'

தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்த்து காங்கிரசுக்கு தி.மு.க., 'செக்'

6


UPDATED : பிப் 20, 2026 10:05 PM

ADDED : பிப் 20, 2026 04:36 AM

Google News

6

UPDATED : பிப் 20, 2026 10:05 PM ADDED : பிப் 20, 2026 04:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஆட்சியில் பங்கு வேண்டும்; அதிக தொகுதிகள் வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. 'ஆட்சியில் பங்கு இல்லை' என்பதை, ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் அறிவித்து விட்டார். தொகுதி பங்கீட்டில், காங்கிரசுக்கு 25 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க, தி.மு.க., விரும்பவில்லை. இப்போது, தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்த்து, காங்கிரஸ் கட்சிக்கு 'செக்' வைத்து விட்டது, ஆளும் தலைமை. இனி காங்கிரசால் பேரம் பேச முடியாத நிலைமையை, தி.மு.க., ஏற்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

கூட்டணி மலர்ந்தது எப்படி?


கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலை, தே.மு.தி.க., முதல் முறையாக சந்தித்தது. விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். தனித்து போட்டியிட்டு, 8 சதவீத ஓட்டுகளை பெற்றது. கடந்த 2009 லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தாலும், 10 சதவீத ஓட்டுகளை பெற்றது. பின், 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 29 எம்.எல்.ஏ.,க்களுடன், சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.

கடந்த 2014 லோக்சபா தேர்தல், 2019 லோக்சபா தேர்தல், 2024 லோக்சபா தேர்தலில் தொடர்ந்து அக்கட்சி தோல்வியை சந்தித்து வந்தது. 2016 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில்களிலும் தோல்வி அடைந்ததால், தற்போது 2 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டு வங்கியை தான் தக்க வைத்திருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலில், கட்சிக்கு அங்கீகாரம் பெற்றாக வேண்டும்; முரசு சின்னத்தை காப்பாற்றியாக வேண்டும் என்பதால், கூட்டணி பேச்சில் அவசரம் காட்டாமல் இருந்து வந்தார் பிரேமலதா.

பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால், அதன் தலைமையிலான கூட்டணியில் இணைய, அவர் விரும்பவில்லை. தன் கட்சியினரின் விருப்பத்தின் அடிப்படையில், முதல் முறையாக தி.மு.க., கூட்டணியில் இணைந்துள்ளார். தே.மு.தி.க.,வில் 50க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலர்கள், தி.மு.க., கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்திருந்தனர்.

அதன்படி, தி.மு.க., மூத்த அமைச்சர் எ.வ.வேலு, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஆகியோருடன் பிரேமலதா பேச்சு நடத்தினார். அமைச்சர் எ.வ.வேலு வீட்டிற்கு மட்டும், ஆறு முறை தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ் சென்றுள்ளார். தே.மு.தி.க.,வுக்கு ஆறு சட்டசபை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா பதவியும் வழங்குவது என பேசப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டதால், இரு கட்சிகள் இடையே கூட்டணி மலர்ந்துள்ளது.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us