தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/காயிதே மில்லத் நினைவிடத்தில் திமுக - காங்கிரஸ் மோதல்

காயிதே மில்லத் நினைவிடத்தில் திமுக - காங்கிரஸ் மோதல்

காயிதே மில்லத் நினைவிடத்தில் திமுக - காங்கிரஸ் மோதல்

6


UPDATED : ஜூன் 06, 2026 06:33 AM

ADDED : ஜூன் 06, 2026 06:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 06, 2026 06:33 AM ADDED : ஜூன் 06, 2026 06:23 AM

6


6
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: காயிதே மில்லத் பிறந்த நாளை முன்னிட்டு, நினைவிடத்தில் மரியாதை செலுத்த சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக, 'துரோகி' என தி.மு.க.,வினர் முழக்கமிட்டு, மரியாதை செலுத்த விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காயிதே மில்லத், 131வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணி மசூதி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று சென்றார். அப்போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வருகைக்காக தி.மு.க.,வினர் காத்திருந்தனர்.

செல்வப்பெருந்தகையை பார்த்ததும், 'துரோகி துரோகி' என கோஷம் எழுப்பிய தி.மு.க.,வினர், காங்கிரசாருடன் வாக்குவாதம் செய்து, அவரை மரியாதை செலுத்த விடாமல் வெளியேற்றினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ஆபாச வார்த்தைகளில் திட்டிக் கொண்டனர்.

பின்னர், ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் மரியாதை செலுத்தி விட்டு சென்ற பின், காயிதே மில்லத் நினைவிடத்தில் செல்வப்பெருந்தகை மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

பின், செல்வப்பெருந்தகை கூறுகையில், “மரியாதை செலுத்த எங்களுக்கு முன், தி.மு.க.,வுக்கு நேரம் ஒதுக்கியுள்ளனர். அது தெரியாமல், காங்கிரஸ் நிர்வாகிகள் வந்து விட்டனர். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்திய பின், நாங்கள் வந்து மரியாதை செலுத்தினோம்.

“தி.மு.க.,வினருடன் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை. 'இண்டி' கூட்டணி கூட்டங்களில் தி.மு.க., பங்கேற்காதது, அவர்களின் விருப்பம். திடீரென கூட்டணியில் இருந்து வெளியேறியதால், எங்கள் மீது வருத்தமும் சங்கடமும் அவர்களுக்கு இருக்கும். இது சரியாகி விடும்,'' என்றார்.

மலர்துாவி முதல்வர் மரியாதை
காயிதே மில்லத் 131வது பிறந்த நாளை ஒட்டி, சென்னை திருவல்லிக்கேணி மசூதி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில், முதல்வர் விஜய் மலர் போர்வை போர்த்தி, மலர் துாவி மரியாதை செலுத்தினார். பின், வளாகத்தில் இருந்தவர்களை பார்த்து கையசைத்தபடி, சிறிது துாரம் நடந்து சென்று, மீண்டும் காரில் புறப்பட்டார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் ஆர்ஜுனா, வெங்கடரமணன், ராஜ்மோகன், ஷாஜகான், முகமுது பர்வேஸ், மரிய வில்சன் மற்றும் கேரள தொழில் துறை அமைச்சர் குஞ்ஞாலி குட்டி, முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முகமது அபுபக்கர், நவாஸ் கனி எம்.பி., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us