தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ மா.கம்யூ., நிர்வாகிகளை வைத்தே தவெக.,வை விமர்சிக்கும் திமுக

 மா.கம்யூ., நிர்வாகிகளை வைத்தே தவெக.,வை விமர்சிக்கும் திமுக

 மா.கம்யூ., நிர்வாகிகளை வைத்தே தவெக.,வை விமர்சிக்கும் திமுக

3


ADDED : ஜூன் 25, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 05:41 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகளை வைத்து, தமிழக வெற்றிக் கழக அரசை தி.மு.க., விமர்சித்து வருவது, மா.கம்யூ., மாநில செயலர் சண்முகத்தை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட மா.கம்யூ., தேர்தலுக்கு பின், அணி மாறிச் சென்று, த.வெ.க., அரசுக்கு ஆதரவளித்துள்ளதால், தி.மு.க.,வினர் கடும் கோபம் அடைந்துள்ளனர்.

மா.கம்யூ., நிர்வாகிகளை வைத்தே, த.வெ.க., அரசையும், முதல்வர் விஜயையும் தி.மு.க.,வினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மா.கம்யூ., இலக்கிய அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் ஆதவன் தீட்சண்யா, 'கேரியரின் உச்சத்தில் ஆரம்பித்து, டிபன் கேரியரி ல் போய் நின்று, இன்றைக்கு பியூஸ் கேரியரில் முடிந்திருக்கக்கூடிய ஆட்சி' என, த.வெ.க., ஆட்சியை விமர்சித்தார். அதை, கவர்னர் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, சுட்டிக் காட்டினார்.

மா.கம்யூ., மத்திய குழு உறுப்பினர் பாலபாரதி, 'வேலைவாய்ப்பு, பெண்களின் பாதுகாப்பு குறித்து, என்ன சொல்லப் போகிறார் என காத்திருந்தால், சினிமா பாணியில் குட்டிக் கதையை சட்டசபையில் முதல்வர் விஜய் சொல்கிறார். அவரது பேச்சு, குட்டீஸ்க்கு பொருந்துமே தவிர, மக்களுக்கு பொருந்தாது' என முதல்வர் விஜயை கிண்டல் செய்தார்.

இதன் பின்னணியில், தி.மு.க., இருப்பதால், மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மா.கம்யூ., நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் போன்ற துணை அமைப்பு நிர்வாகிகள் பலர், தி.மு.க., விசுவாசிகளாக உள்ளனர். அவர்கள் வாயிலாக, மா.கம்யூ., கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த, தி.மு.க., நினைக்கிறது' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us