வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தி.மு.க., தேர்தல் அறிக்கை: கனிமொழி
வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தி.மு.க., தேர்தல் அறிக்கை: கனிமொழி
ADDED : டிச 23, 2025 06:06 AM

சென்னை: வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு, தி.மு.க., சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
இதை தயாரிக்க, அக்கட்சியின் துணை பொதுச்செயலர் கனிமொழி தலைமையில், 12 பேர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. முன்னதாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ஆலோசனை கூட்டம் முடிந்த பின், கனிமொழி அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஏழாம் முறையாக தி.மு.க., ஆட்சி அமைக்கவும், முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதல்வராக தொடரும் வகையிலும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி வெற்றிகரமாக அமையும். ஆலோசனை கூட்டத்தில், யார் யார் எந்தெந்த மாவட்டத்திற்கு செல்வது என்பது குறித்து விவாதித்தோம்.
குழுவினரின் பயண தேதி விரைவில் அறிவிக்கப்படும். மத்திய அரசு வேலைவாய்ப்பை பறிப்பதை, ஒரு வேலையாக பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் தமிழகத்தின் வளர்ச்சியை மையமாக வைத்து, வேலைவாய்ப்பை உருவாக்குவது, மகளிர் உரிமை, விவசாயிகளை பாதுகாப்பது, மாநில உரிமை போன்றவற்றை உள்ளடக்கியதாக தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

