தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/'தி.மு.க., பைல்ஸ் - 3': அண்ணாமலை ரிலீஸ்

'தி.மு.க., பைல்ஸ் - 3': அண்ணாமலை ரிலீஸ்

'தி.மு.க., பைல்ஸ் - 3': அண்ணாமலை ரிலீஸ்


ADDED : ஜன 15, 2024 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2024 02:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு, முன்னாள் டி.ஜி.பி., ஜாபர்சேட் ஆகியோரின் தொலைபேசி உரையாடல் இடம் பெற்றுள்ள தி.மு.க., பைல்ஸ் பாகம் மூன்று என்ற வீடியோவை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 2023 ஏப்., 14ல், தி.மு.க., பைல்ஸ் பாகம் ஒன்று வெளியிட்டார். அதில் தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன், அமைச்சர் துரைமுருகன், முதல்வரின் குடும்பத்தினர் உள்ளிட்ட சிலரின் சொத்துப் பட்டியல் இடம் பெற்றிருந்தது.

அதை தொடர்ந்து, ஜூலை மாதம் தி.மு.க., பைல்ஸ் பாகம் இரண்டு வெளியிட்டார். அதில், அரசு துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்திருந்த முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன.

தி.மு.க., பைல்ஸ் பாகம் மூன்று என்ற வீடியோ பதிவை, அண்ணாமலை நேற்று வெளியிட்டார். அதில், தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு, முன்னாள் டி.ஜி.பி., ஜாபர் சேட் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன.

அவர்கள் இருவரும் பேசியது தொடர்பான, கூடுதல் விவரங்களை வரும் நாட்களில் வெளியிடுவதாக, அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

'இண்டியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஊழல் தன்மையை அம்பலப்படுத்தும் பல நாடாக்களில் இதுவும் ஒன்று.

இந்த கூட்டணி 2004ம் ஆண்டு முதல் 20014ம் ஆண்டு வரை வேறு பெயரை கொண்டிருந்தது. டி.ஆர்.பாலு, ஜாபர் சேட் உரையாடலில், 2ஜி விசாரணையில் சி.பி.ஐ., ரெய்டுகளின் நேரத்தை தி.மு.க., காங்கிரஸ் முடிவு செய்து, விசாரணையை நீர்த்து போக செய்யும் வகையில் செயல்பட்டனர்.

வரும் நாட்களில் இது தொடர்பாக, மேலும் பல்வேறு தகவல்கள் வெளியிடப்படும்.

இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us