தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/தே.ஜ., கூட்டணியை வீழ்த்த தி.மு.க., 'மாஸ்டர் பிளான்'

தே.ஜ., கூட்டணியை வீழ்த்த தி.மு.க., 'மாஸ்டர் பிளான்'

தே.ஜ., கூட்டணியை வீழ்த்த தி.மு.க., 'மாஸ்டர் பிளான்'


ADDED : மார் 05, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 05:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓசூர்: வரும் சட்டசபை தேர்தலில், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்திலுள்ள 11 சட்டசபை தொகுதிகளையும் கைப்பற்ற, தி.மு.க., காய் நகர்த்துகிறது. அதற்காக, உளவுப்பிரிவு போலீசார், களம் இறக்கி விடப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில், அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - த.வெ.க., - நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவற்றுக்கு எங்கிருந்து பணம் வருகிறது.

ஏற்கனவே தேர்தலுக்கு பணம் வந்திருந்தால், அதை எங்கு பதுக்கி வைத்துள்ளனர் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை, உளவுப்பிரிவு போலீசார் கடந்த 10 நாட்களாக சேகரித்தனர்; அந்த தகவல்களை மேலிடத்துக்கு அனுப்பியுள்ளனர்.

அது, தி.மு.க., தலைமைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதை வைத்து, எதிர்க்கட்சிகளை அம்மாவட்டங்களில் சாதுர்யமாக வீழ்த்தும் பணியை மேற்கொள்ளவே, தி.மு.க., சார்பில் உளவுத்துறை வாயிலாக இந்த விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.



தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலுக்கு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா.ம.க., - அ.தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ள நிலையில், அதை எதிர்கொள்ள தி.மு.க., தரப்பில் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.

அதனால், உளவுத்துறை வாயிலாக தி.மு.க., மேலிடம் தகவல்களை பெற்றுள்ளது. அதை கொண்டு, ஓட்டுகளில் பெரும் பகுதியை கவர, பல்வேறு பணிகளை தி.மு.க.,வினர் செய்வர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us