தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/திமுக புதிய மா.செ.,க்கள் அறிவிப்பு தாமதம்; இளைஞரணிக்குள் புகைச்சல்

திமுக புதிய மா.செ.,க்கள் அறிவிப்பு தாமதம்; இளைஞரணிக்குள் புகைச்சல்

திமுக புதிய மா.செ.,க்கள் அறிவிப்பு தாமதம்; இளைஞரணிக்குள் புகைச்சல்

1


ADDED : செப் 21, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : செப் 21, 2026 05:09 AM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: தி.மு.க.,வில் புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு மீண்டும் தள்ளிப்போவதால் இளைஞரணிக்குள் புகைச்சல் எழுந்துள்ளது.

த.வெ.க., வெற்றிக்கு பின் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கட்சி சீரமைப்பு பணியை தி.மு.க., மேற்கொண்டது. அமைப்பு ரீதியாக 77 ஆக இருந்த மா.செ.,க்கள் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்தியது. இரண்டு சட்டசபை தொகுதிக்கு ஒரு மா.செ., வீதம் நியமிக்கவும், புதிய மா.செ., பதவிக்கு இளைஞர்கள், மகளிருக்கு வாய்ப்பு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி 70 வயது அல்லது மூன்று முறை மா.செ., பதவி வகித்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் புதிய மா.செ., பதவிகளுக்கு, உதயநிதியின் வசம் உள்ள இளைஞரணி நிர்வாகிகள் பலருக்கு உதயநிதி பரிந்துரை செய்தார். அதற்கேற்ப புதிய மா.செ.,க்கள் 'லிஸ்ட்'டும் தயாரான நிலையில், சீனியர்கள் சிலரின் முட்டுக்கட்டையால் அறிவிப்பில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது.

முப்பெரும் விழா தி.மு.க., முப்பெரும் விழாவிலும் புதிய மா.செ.,க்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு பின் அறிவிப்பு வெளியாகக்கூடும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் இளைஞரணியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: தி.மு.க., என்றாலே ஊழல் கட்சி என்ற பிம்பத்தை ஆளுங்கட்சி தொடர்ந்து கட்டமைத்து வருகிறது. அதற்கேற்ப ஆதாரமே இல்லையென்றாலும் தி.மு.க., சீனியர் மா.செ.,க்களின் முறைகேடு, ரெய்டுகள், வழக்குகளை குறிப்பிட்டு த.வெ.க., விமர்சிக்கிறது.

இந்த பிம்பத்தை உடைக்கவும், த.வெ.க.,வுக்கு இணையாக இளைஞர்களிடையே எழுச்சியை உருவாக்கவும் புதிய மா.செ.,க்களை உடனே அறிவிக்க வேண்டும் என்று உதயநிதி தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ஆனால் ஸ்டாலினை சுற்றியுள்ள சில சீனியர்கள் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளனர். இதனால் தான் முப்பெரும் விழாவுக்கு பின்பும் அறிவிப்பு தள்ளிப்போனது என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us