தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/35 தொகுதிகளில் போட்டியிட தி.மு.க., திட்டம்!

35 தொகுதிகளில் போட்டியிட தி.மு.க., திட்டம்!

35 தொகுதிகளில் போட்டியிட தி.மு.க., திட்டம்!


UPDATED : பிப் 11, 2024 12:13 PM

ADDED : பிப் 11, 2024 12:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2024 12:13 PM ADDED : பிப் 11, 2024 12:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லோக்சபா தேர்தலில், 35 தொகுதிகளில் போட்டியிட, தி.மு.க., திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்பெயின் பயணத்தை முடித்து சென்னை திரும்பியதும், தி.மு.க., தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினரை அழைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசினார். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கை, கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

40 தொகுதிகள்


சென்னை அறிவாலயத்தில் நடந்த, லோக்சபா தொகுதிகளின் நிர்வாகிகள் கூட்டங்களில், 40 தொகுதிகளிலும் தி.மு.க.,வே போட்டியிட வேண்டும் என வலியுறுத்திய தகவலை, முதல்வர் ஸ்டாலினிடம், தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்தனர்.

'கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த எண்ணிக்கையை ஒதுக்கி தந்துவிட்டு, தி.மு.க., அதிக தொகுதிகளில் போட்டியிடுவதே நல்லது' என, நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்களையும், முதல்வரிடம் எடுத்துக் கூறினர்.

சில தொகுதிகளில் காங்கிரஸ் எம்.பி.,க்கள், மக்களை சந்திக்கவே செல்லவில்லை என்றும், அந்த தொகுதிகளை மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கினால் தோல்வி நிச்சயம் என்று, கட்சியினர் கூறிய எச்சரிக்கையையும், முதல்வர் காதில் போட்டனர்.

இதற்கிடையில், எந்தெந்த தொகுதிகளில் தி.மு.க., போட்டியிட வேண்டும் என ஆய்வு செய்த தேர்தல் வியூக நிறுவனத்தின் அறிக்கை குறித்தும், முதல்வரிடம் விளக்கப்பட்டுள்ளது.

முதல் சுற்று பேச்சு


அதன் பின், காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க.,வுக்கு தொகுதிகளை குறைப்பது என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 30 முதல் 35 தொகுதிகள் வரை, தி.மு.க., போட்டியிடலாம் என்று திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இச்சூழலில், நாளை விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிகளுடன், தி.மு.க., குழுவினர், முதல் சுற்று பேச்சு நடத்த உள்ளனர்.

துணை பிரதமர் ஆவாரா?


இது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - நாம் தமிழர் கட்சி என, நான்கு முனைப் போட்டி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. தொகுதிக்கு குறைந்தபட்சம், 40 கோடி ரூபாய் தேர்தல் செலவு செய்ய வேண்டும். கூட்டணி கட்சிகளால், அந்தளவுக்கு தாக்குப்பிடிக்க முடியாது என்பதால், தி.மு.க., போட்டியிட்டால் தான் சமாளிக்க முடியும்.
35 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றால் தான், பா.ஜ.,வுக்கு அடுத்த நிலையில் தி.மு.க., பெரிய சக்தியாக வர முடியும்.அவ்வாறு இரண்டாம் இடம் பிடிக்கும் பட்சத்தில் ஸ்டாலின் துணை பிரதமர் ஆகவும் வாய்ப்பு உள்ளது.எனவே தான், அதிக தொகுதிகளில் தி.மு.க., வும், குறைந்த தொகுதிகளில் கூட்டணி கட்சி களும் போட்டியிட தி.மு.க., விரும்புகிறது. இதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பதில் குழப்பம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.



தியாகம் செய்ய வேண்டும்!


தேசிய அளவில், தி.மு.க., இரண்டாவது பெரிய கட்சியாக வர வேண்டும் என, தமிழக மக்கள் விரும்புகின்றனர். 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற்றால், ஆட்சி அமைக்கும் பணியில், முழு பங்கு வகிக்கும் கட்சியாக, தி.மு.க., விளங்கும். மத்திய ஆட்சியை வழிநடத்தும் சக்தியாக தி.மு.க., திகழும். பிரதமர் பதவிக்கு தலைமை வகித்து, ஆட்சி நடத்தும் முழு திறமையும், சக்தியும் ஸ்டாலினுக்கு உள்ளது.
ஸ்டாலின் பிரதமராக, கூட்டணி கட்சிகள் தொகுதிகளை தியாகம் செய்ய முன்வர வேண்டும். அது நிறைவேறுவதற்கு அடித்தளமாக, 35 தொகுதிகளில் தி.மு.க.,வும், 5 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெறும் வகையில், தொகுதி பங்கீடு பேச்சு சுமூகமாக முடியும் என நம்புகிறேன்.
- கோவை செல்வராஜ்
தி.மு.க., செய்தி தொடர்பு
துணை செயலர்.



- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us