தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ தி.மு.க.,வினரின் விமர்சனம் வலியை தருகிறது: வி.சி.க., தலைவர் திருமாவளவன் வேதனை

 தி.மு.க.,வினரின் விமர்சனம் வலியை தருகிறது: வி.சி.க., தலைவர் திருமாவளவன் வேதனை

 தி.மு.க.,வினரின் விமர்சனம் வலியை தருகிறது: வி.சி.க., தலைவர் திருமாவளவன் வேதனை


ADDED : மே 28, 2026 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 01:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''தி.மு.க.,வினர் விமர்சிப்பது வலியை தருகிறது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் சேர்ந்து, எந்த சதியும் நான் செய்யவில்லை'', என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அவர், நேற்று வெளியிட்ட வீடியோ பதிவு:

தேர்தலில், தனிப்பெரும் கட்சியாக வென்ற, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க, தி.மு.க., கூட்டணியில் இருந்த வி.சி.க., உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன.

இதை, பலரும் விமர்சிக்கின்றனர். இதில், வருத்தப்படவோ, ஆத்திரப்படவோ எதுவும் இல்லை.

த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம் தெரிவித்தோம்; அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து தெரிவிக்க முடியவில்லை. அதேநேரம், தி.மு.க., முன்னணி நிர்வாகிகளிடம் தெரிவித்தோம்.

அதையும் தாண்டி, தி.மு.க., - எம்.பி., ராஜா உள்ளிட்டோர் விமர்சிப்பது வலியை தருகிறது.

அவர்கள் ஆதங்கப்படுவதில் நியாயம் இருப்பதை உணர முடிகிறது. தி.மு.க.,வை கடுமையாக விமர்சிக்கும் த.வெ.க.,வோடு நாங்கள் நிற்பதை, அவர்களால் எப்படி எளிதாக கடந்து செல்ல முடியும்? எனவே, ராஜா மற்றும் தி.மு.க.,வுக்கு எதிராக போராட்டம் நடத்துவது தேவையற்றது.

காங்கிரசை விட, வி.சி.க., செய்தது பெரிய துரோகம் என்கின்றனர். தி.மு.க.,வுடன் எவ்வளவு நேர்மையான உறவை வி.சி.க., கொண்டிருந்தது என, ஸ்டாலின் மனசாட்சிக்கு தெரியும்.

தி.மு.க.,வுடனான பிரச்னையை ஊதி பெரிதாக்க வேண்டாம். ஆதவ் அர்ஜுனா, த.வெ.க.,வில் இணைந்த பின், கரூர் சம்பவத்தின்போது தான் அவரிடம் பேசினேன்.

அதன்பின், தேர்தல் முடிவுக்கு பின் தான் இருவரும் பேசினோம். நான், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் சேர்ந்து, எந்த சதியும் செய்யவில்லை.

இந்த தேர்தலில், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் ஓட்டுகள், 100 சதவீதம் முழுமையாக தி.மு.க., கூட்டணிக்கு கிடைக்கவில்லை. ஆனால், வி.சி.க.,வுக்கான தலித் ஓட்டுகள் சிதறியதால் தான், தி.மு.க., தோல்வியடைந்ததாக சொல்கின்றனர். பா.ஜ., - நா.த.க., கட்சிகளும், ஓட்டு சதவீதங்களை இழந்துள்ளன.

தி.மு.க., - அ.தி.மு.க.,வின் நிலையான ஓட்டுகளும் சரிந்துள்ளன. மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்று, அமைச்சரவையிலும் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் இடத்தை வி.சி.க., எட்டியதை பொறுக்க முடியாமல், அவதுாறு பரப்புகின்றனர்.

இவ்வாறு கூறியுள்ளார்.

'வன்ம வார்த்தைகளால் வந்த வினை'

தி.மு.க., - எம்.பி., ராஜா கருத்துக்களால் மோதல் வெடித்த நிலையில், வி.சி.க., பொருளாளர் பாலாஜி வெளியிட்ட அறிக்கையில், 'ஆரோக்கியமான கருத்து எனில், ஆர்ப்பாட்டம் இருந்திருக்காது. இது, வன்மம் நிறைந்த வார்த்தைகளால் வந்த வினை. செய்வதெல்லாம் செய்து விட்டு, ஜனநாயகம் பற்றி ராஜா பேசலாமா? மனம் திருந்தி வருந்தினால், மறப்போம், மன்னிப்போம்,' என கூறியுள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us