தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ வி.சி.க., அதிருப்தியாளர்களை வேண்டாம் என்கிறது தி.மு.க.,

 வி.சி.க., அதிருப்தியாளர்களை வேண்டாம் என்கிறது தி.மு.க.,

 வி.சி.க., அதிருப்தியாளர்களை வேண்டாம் என்கிறது தி.மு.க.,


ADDED : மே 31, 2026 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2026 12:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

தி.மு.க.,வுக்கு தாவ தயாராக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிருப்தியாளர்களை இப்போதைக்கு கட்சியில் சேர்க்க வேண்டாம் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்.

சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் வி.சி.க., எட்டு இடங்களில் போட்டியிட்டது. இதில், ஏற்கனவே எம்.எல்.ஏ.,க்களாக இருந்த ஆளூர் ஷா நவாஸ், எஸ்.எஸ். பாலாஜி, பனையூர் பாபு ஆகிய மூவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதனால், மூவரும் அதிருப்தியில் இருந்த நிலையில், பாலாஜிக்கு கட்சி பொருளாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதனால், அவர் தினமும் கட்சி அலுவலகத்திற்கு வந்து, பணிகளை செய்து வருகிறார்.

அதே நேரத்தில், முதன்மை செயலர் பதவி பெற்ற ஆளூர் ஷா நவாஸ், கட்சி பணிகளில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

திருமாவளவனின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை எனக்கூறி, கட்சியிலிருந்து பனையூர் பாபு விலகியுள்ளார். தற்போது அவர் தி.மு.க.,வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தலுக்கு பின், தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் வி.சி.க., சேர்ந்துள்ளது. இது, வி.சி.க.,வில் இருக்கும் ஒரு சில நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை. இதனால், அவர்கள் தி.மு.க.,வில் சேர தயாராக உள்ளனர்.

இந்த தகவல் தெரிய வந்ததும், 'இப்போதைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் யாரையும் சேர்க்க வேண்டாம்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறி விட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து, வி.சி.க., அதிருப்தியாளர்கள் சிலர் கூறியதாவது:

த.வெ.க., அமைச்சரவையில் வி.சி.க., இடம் பெற்றிருந்தாலும், தி.மு.க., உடனான நட்பை திருமாவளவன் தொடர்ந்து வருகிறார்; தி.மு.க., முன்னாள் அமைச்சர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறார். தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறி விட்டதாக திருமாவளவன் அறிவிக்காமல் உள்ளார்.

அதேபோல, ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வர உள்ள சூழலில், வி.சி.க., தலைமையை நேரடியாக பகைத்துக் கொள்ள தி.மு.க., தயாராக இல்லை.

இதனால், வி.சி.க.,வில் இருந்து வெளியேற விரும்பினாலும், எங்களால் தி.மு.க.,வில் சேர முடியவில்லை. அதனால் தான், வி.சி.க.,வில் இருந்து விலகிய பனையூர் பாபு உள்ளிட்டோர் காத்திருக்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us