sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கமல் கட்சியிடம் 'கறார்' காட்டும் தி.மு.க.,: உதயசூரியனில் போட்டியிடவும் நெருக்கடி

/

கமல் கட்சியிடம் 'கறார்' காட்டும் தி.மு.க.,: உதயசூரியனில் போட்டியிடவும் நெருக்கடி

கமல் கட்சியிடம் 'கறார்' காட்டும் தி.மு.க.,: உதயசூரியனில் போட்டியிடவும் நெருக்கடி

கமல் கட்சியிடம் 'கறார்' காட்டும் தி.மு.க.,: உதயசூரியனில் போட்டியிடவும் நெருக்கடி

13


ADDED : மார் 20, 2026 05:49 AM

Google News

13

ADDED : மார் 20, 2026 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

கூட்டணியில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்குவதாகவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் எனவும் தி.மு.க., அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக, கமல் தலைமையில் அவரது கட்சியினர் சென்னையில் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய கமல், தி.மு.க., ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பி.,யாகி விட்டார். இந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இணைந்துள்ள அவரது கட்சிக்கு, 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளை எதிர்பார்க்கும் ம.நீ.ம., கட்சி, 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிடவும் விரும்புகிறது.

சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினருடன் நேற்று நடந்த பேச்சில், ம.நீ.ம., பொதுச்செயலர் அருணாச்சலம் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். அப்போது, 'உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும்; இரண்டு தொகுதிகளுக்கு மேல் தர முடியாது' என தி.மு.க., தரப்பில் கறாராக கூறப்பட்டுள்ளது. இதனால், கமல் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியுடன் வெளியேறினர்.

அருணாச்சலம் அளித்த பேட்டி: தி.மு.க., தரப்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கோரிக்கை வைத்தனர். கடந்த தேர்தல்களில், 'டார்ச் லைட்' சின்னம் வாயிலாக 4 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளோம். எனவே, அந்த சின்னத்திலேயே போட்டியிடுவோம் என வலியுறுத்தினோம். தொகுதி எண்ணிக்கை பேச்சு சுமுகமாகவே முடிந்தாலும், சின்னம் குறித்த பேச்சு தான் நீடித்து வருகிறது. கமல் முடிவு தான் இறுதியானது. இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க., தரப்பில் நடந்த பேச்சு விபரங்கள், நேற்று ஹைதராபாத் புறப்பட தயாராக இருந்த கமலுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கட்சியின் நிர்வாகக் குழுவை கூட்ட அவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கமல் கட்சியின் அவசர நிர்வாகக் குழு கூட்டம் சென்னை அண்ணா நகரில் உள்ள சாம்கோ ஹோட்டலில் இன்று மாலை நடக்கிறது. அதில், எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

'வெற்றியை எதிர்பார்க்கிறோம்'


சென்னை விமான நிலையத்தில் கமல் அளித்த பேட்டி: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் நடக்கும் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க செல்வதால், இப்போது அரசியல் பேச விரும்பவில்லை. அந்நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய பின், நிச்சயம் அரசியல் பேசுவோம். தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு, சின்னம் குறித்து பேச்சு நடந்து வருகிறது. சட்டசபை தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும். நாங்கள் வெற்றியை எதிர்பார்க்கிறோம்; அவ்வளவு தான். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us