ADDED : அக் 28, 2025 05:26 AM

மதுரை மக்களின் பிரச்னைகளை சட்டசபையில் பேசினால், அமைச்சர் மூர்த்தி சிரித்துக் கொண்டிருந்தார். தி.மு.க., மீது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருப்பதால் மூர்த்தியை முற்றுகையிடுகின்றனர்.
மதுரை மாநகராட்சியில், 69 கவுன்சிலர்களை வைத்துள்ள தி.மு.க.,வால் புதிய மேயரை தேர்வு செய்ய முடியவில்லை. தி.மு.க., கவுன்சிலர்களின் கலக் ஷன், கரப்ஷனே காரணம். புதிய மேயர், மண்டலத் தலைவர்களை தேர்வு செய்ய முடியாதது மதுரைக்கு ஏற்பட்ட சோதனை.
அ.தி.மு.க.,வை யாரும் அடிமைப்படுத்த முடியாது. திருமாவளவனால், அவரது கட்சியினரையே ஒருமுகப்படுத்த முடியவில்லை; அவரே மாற்றி மாற்றி பேசுகிறார். அரசியல் அடையாளத்துக்காக, ஏதாவது பேசிக் கொண்டு இருக்கும் தினகரனை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
விஜயின் த.வெ.க.,வை, தி.மு.க., வளர விடாது. தி.மு.க.,வுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும்.
- செல்லுார் ராஜு
முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

