மாவட்டங்களில் தி.மு.க., 'வார் ரூம்'; நிர்வாகிகளுக்கும் முக்கிய பொறுப்பு
மாவட்டங்களில் தி.மு.க., 'வார் ரூம்'; நிர்வாகிகளுக்கும் முக்கிய பொறுப்பு
ADDED : பிப் 12, 2024 04:17 AM

சென்னை: தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து, வெற்றி வியூகம் வகுக்கும் வகையில், தி.மு.க.,வில், அமைப்பு ரீதியான மாவட்டங்களில், 'வார் ரூம்' அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்பும் தரப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தலை சந்திக்க, தி.மு.க., பல்வேறு வியூகங்களை வகுத்து, தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
மூன்று குழுக்கள்
ஏற்கனவே ஒருங்கிணைப்பு குழு, தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் அறிக்கை குழு என, மூன்று குழுக்களை அமைத்து, தேர்தல் பணிகளை அக்கட்சி முடுக்கிவிட்டுள்ளது.
அத்துடன், வரும் லோக்சபா தேர்தலுக்கு, சென்னை அறிவாலயத்தில் மட்டும் வார் ரூம் அமைக்காமல், கட்சியின் அமைப்பு ரீதியாக உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைத்துள்ளது.
யார் யாருக்கு பொறுப்பு?
வார் ரூம்களில், தொகுதி பார்வையாளர்கள், ஒருங்கிணைப்பு, பூத் கமிட்டி மேலாண்மை, பிரசாரம், மேற்பார்வை போன்ற பணிகளுக்கு, இணை அமைப்பு செயலர் அன்பகம் கலை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுஉள்ளார்
ஊடக விவாதக்குழு மேலாண்மை, நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரம், மேலாண்மை போன்றவற்றுக்காக, துணை அமைப்பு செயலர் ஆஸ்டினும், சட்டக்குழு மற்றும் தேர்தல் ஆணையம் சார்ந்த பணிகளுக்காக, என்.ஆர்.இளங்கோவும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுஉள்ளனர்
தேர்தல் பணிகள்தொடர்பாக, தலைமை நிலைய ஒருங்கிணைப்பாளர்களாக துறைமுகம் காஜா, பூச்சி முருகன் ஆகியோர், 40 மாவட்டங்களுக்கும் நியமிக்கப்பட்டுஉள்ளனர்
தேர்தல் வழக்குகள், தேர்தல் ஆணையத்தில் கோரிக்கைகள் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகள் பெறும் பணிகளுக்கு வழக்கறிஞர்கள் சரவணன், பச்சையப்பன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கானஅறிவிப்பை, தி.மு.க.,தலைமை நேற்று வெளியிட்டுள்ளது.

