sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

மதுரை மாநகராட்சி ரூ.பல கோடி முறைகேடு வழக்கில் தி.மு.க., பெண் மண்டல தலைவர்களிடம் விசாரணை

/

மதுரை மாநகராட்சி ரூ.பல கோடி முறைகேடு வழக்கில் தி.மு.க., பெண் மண்டல தலைவர்களிடம் விசாரணை

மதுரை மாநகராட்சி ரூ.பல கோடி முறைகேடு வழக்கில் தி.மு.க., பெண் மண்டல தலைவர்களிடம் விசாரணை

மதுரை மாநகராட்சி ரூ.பல கோடி முறைகேடு வழக்கில் தி.மு.க., பெண் மண்டல தலைவர்களிடம் விசாரணை

7


UPDATED : ஜூலை 07, 2025 09:53 AM

ADDED : ஜூலை 07, 2025 03:26 AM

Google News

7

UPDATED : ஜூலை 07, 2025 09:53 AM ADDED : ஜூலை 07, 2025 03:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாநகராட்சியில் விதிமீறி ரூ. பல கோடி முறைகேடு நடந்த வழக்கில் தி.மு.க., பெண் மண்டலத்தலைவர்களிடம் நேற்று இரவு வரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களின் கணவர்களிடமும் சரமாரி கேள்விகள் எழுப்பினர்.

இம்மாநகராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் கட்டடங்கள், வீடுகளுக்கு சொத்துவரி குறைவாக நிர்ணயிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இவ்வழக்கில் குற்றப்பிரிவு உதவி கமிஷனர் வினோதினி தலைமையில் நடந்த விசாரணை முடிவில் ஓய்வு உதவி கமிஷனர், மண்டலம் 3 தலைவரின் நேர்முக உதவியாளர் தனசேகரன், உதவி வருவாய் அலுவலர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தனசேகரன், புரோக்கர்கள் சாகா உசேன், ராஜேைஷ 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது. அப்போது 5 நாள் போலீஸ் காவல் கேட்கப்பட்டது. மடப்புரம் கோயில் காவலாளி வழக்கை காட்டி வழக்கறிஞர்கள் போலீஸ் காவல் கூடாது என்றனர்.

மூன்றுநாள் போலீஸ் காவல்


இதையடுத்து விசாரணைக்கு முன், பின் அரசு மருத்துவமனையில் டாக்டர் சான்று பெற வேண்டும். காலை 10:00 - மாலை 6:00 மணி வரை விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதை ஏற்பதாக உதவி கமிஷனர் உறுதியளித்த பின் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்கப்பட்டது.

பெண் மண்டல தலைவர்கள் ஆஜர்


கைதான மூவரிடம் நடத்திய விசாரணையின்படி தி.மு.க., மண்டல தலைவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று முன் தினம் பாண்டிச்செல்வி (மண்டலம் 3), சரவணபுவனேஸ்வரி (மண்டலம் 2), சுவிதாவிடம் (மண்டலம் 5) போலீசார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் விசாரித்தனர். அவர்களுடன் கணவர்களும் முறையே பாண்டியன், சரவணன், விமல் ஆஜராகினர். தி.மு.க.,வில் சரவணன் பகுதி, விமல் இளைஞரணி செயலாளர்களாக உள்ளனர். போலீசாரால் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் மண்டலத்தலைவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

100 கேள்விகள்மழுப்பல் பதில்கள்


போலீசார் கூறியதாவது: மண்டலம் 2, 3, 4, 5 தலைவர்களை மட்டும் விசாரணைக்கு அழைக்க இருந்தோம். முறைகேடு புகார் இல்லாவிட்டாலும் மண்டலம் 1ல் சொத்துவரி முறைகேடு நடந்துள்ளதா என உறுதிசெய்ய தலைவர் வாசுகி, கணவர் சசிகுமாரையும் (தி.மு.க., பகுதி செயலாளர்) விசாரித்தோம். மண்டல தலைவர்களிடம் வரி குறைத்து நிர்ணயித்துள்ளதற்கு தொடர்பு உள்ளதா, பில் கலெக்டர்கள் உங்கள் அனுமதி பெற்று வரியை குறைத்தார்களா, வரியை குறைக்க வலியுறுத்தினீர்களா என்பது உட்பட 100க்கும் மேற்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டன. மண்டல தலைவர்கள், கணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்தனர். சிலவற்றுக்கு,' என் கவனத்திற்கு வரவில்லை, தெரியாது,' என மழுப்பலாக பதிலளித்தனர்.

மண்டலம் 3 அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. அவற்றை ஆன் செய்து சில வரிவிதிப்புகளை காட்டி தலைவர் பாண்டிச்செல்வி, கணவர் பாண்டியனிடம் கேள்வி கேட்கப்பட்டது. மண்டலம் 5 தலைவர் சுவிதா, கணவர் விமலிடம் விசாரித்து முடிக்க இரவு 9:00 மணியை தாண்டியது. இது முதற்கட்ட விசாரணை. தேவைப்பட்டால் மீண்டும் மண்டல தலைவர்கள் அழைக்கப்படுவர் என்றனர்.

மண்டலம் 4 ன் தலைவர் (தி.மு.க.,) முகேஷ் சர்மா குடும்பத்துடன் கோவா சென்றுள்ளார். அவருக்கு விசாரணை குறித்து போலீசார் தெரிவித்தனர். இன்று (ஜூலை 7) அவர் விசாரணைக்கு வரவும் உத்தரவிட்டுள்ளனர்.

அ.தி.மு.க., போராட்டம் காரணமா


இம்முறைகேட்டை கண்டித்து நாளை (ஜூலை 8) அ.தி.மு.க., போராட்டம் அறிவித்துள்ளது. மேலும் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தலைமையில் நடந்த கூட்டத்தில், இதுவரை மண்டல தலைவர்கள், கவுன்சிலர்களிடம் ஏன் விசாரிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து கைதானவர்களை அவசரமாக போலீஸ் காவலில் எடுத்து வாக்குமூலம் பெற்று தி.மு.க., மண்டல தலைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் இம்முறைகேடு குறித்து தி.மு.க., தலைமை நடவடிக்கை எடுக்கலாம்.






      Dinamalar
      Follow us