தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/தனியார் பள்ளிகளிடம் நடந்த வசூல்; திமுக மகேஷ் மனைவிக்கு சிக்கல்

தனியார் பள்ளிகளிடம் நடந்த வசூல்; திமுக மகேஷ் மனைவிக்கு சிக்கல்

தனியார் பள்ளிகளிடம் நடந்த வசூல்; திமுக மகேஷ் மனைவிக்கு சிக்கல்


ADDED : நவ 28, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 05:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் வசூலித்த பணம் தொடர்பாக, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்குமார் அளித்த வாக்குமூலத்தால், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் மனைவி ஜனனிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவது தொடர்பாக, 400 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்தது குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த தி.மு.க., ஆட்சியில் பள்ளி கல்வித் துறை அமைச்சராக இருந்த மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்குமார், தி.மு.க., நிர்வாகி அரசகுமார், அவர் களின் நெருங்கிய கூட்டாளி சரவணன் உள்ளிட்டோரை கைது செய்தனர். இவர்களில், மகேஷ், முத்துக்குமார், சரவணன் ஆகியோரை, நீதிமன்ற உத்தரவின்படி தங்கள் காவலில் எடுத்து விசாரித்து உள்ளனர்.

அப்போது, முத்துக்குமார் மற்றும் சரவணன் ஆகியோர் அளித்த வாக்கு மூலத்தில், 'அரசகுமார் உத்தரவின்படி, தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் வசூலித்த பணம், மகேஷ் மனைவி ஜனனி யிடமும் தரப்பட்டுள்ளது' என, கூறியுள்ளனர்.

இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: அரசகுமார் உள்ளிட்ட மூவரை கைது செய்த பின், முத்துக்குமார் மற்றும் சரவணன் உள்ளிட்டோரை யும் தீவிரமாக தேடினோம். ஆனால், அவர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர். இதுபற்றி நாங்கள் ரகசிய விசாரணை மேற்கொண்டபோது, முத்துக்குமார் மற்றும் சரவணன் ஆகியோரை மகேஷ் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது தெரியவந்தது.

இதுவரை, நாங்கள் நடத்திய விசாரணையில், மகேஷ் ஆதரவுடன் தான், 400 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துஉள்ளது தெரியவந்து உள்ளது. இவ்வழக்கில், முத்துக்குமார் மற்றும் சரவணன் ஆகியோர் அளித்த வாக்குமூலங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.

மாவட்ட வாரியாக கூட்டம் நடத்தி, தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் வசூலித்த பணத்தை, அன்பில் மகேஷ் மனைவி ஜனனியிடமும் ஒப்படைத்து இருப்பதாக கூறியுள்ளனர். இதனால், அடுத்த கட்டமாக ஜனனியிடம் விசாரணை நடத்த உள்ளோம். அவர், மஹாராஷ் டிரா மாநிலம் மும்பையில் இருப்பதாக தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us