sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

அண்ணா ம.தி.மு.க., பெயரில் உருவாகும் புதுக்கட்சி; வைகோவுக்கு 'செக்' வைக்க தி.மு.க., புது திட்டம்

/

அண்ணா ம.தி.மு.க., பெயரில் உருவாகும் புதுக்கட்சி; வைகோவுக்கு 'செக்' வைக்க தி.மு.க., புது திட்டம்

அண்ணா ம.தி.மு.க., பெயரில் உருவாகும் புதுக்கட்சி; வைகோவுக்கு 'செக்' வைக்க தி.மு.க., புது திட்டம்

அண்ணா ம.தி.மு.க., பெயரில் உருவாகும் புதுக்கட்சி; வைகோவுக்கு 'செக்' வைக்க தி.மு.க., புது திட்டம்

7


ADDED : ஜூலை 19, 2025 01:59 AM

Google News

7

ADDED : ஜூலை 19, 2025 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ம.தி.மு.க.,விலிருந்து வெளியேற்றப்பட்ட அதிருப்தியாளர்கள், அண்ணா ம.தி.மு.க., என்ற பெயரில் புதிய கட்சியை துவக்க திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

ம.தி.மு.க.,வில் வைகோ மகன் துரையின் அரசியல் பிரவேசத்திற்கு, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அதை கண்டு கொள்ளாமல், மகனுக்கு கட்சியில் முதன்மை செயலர் பதவியை வைகோ வழங்கினார்.

இதனால், அதிருப்தி அடைந்த அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, 'ம.தி.மு.க.,வை தி.மு.க., வில் இணைத்து விடலாம்; இனி கட்சி தேறுவதற்கு வாய்ப்பே இல்லை' என வைகோவிற்கு, கடந்த ஆண்டில் கடிதம் எழுதிவிட்டு, கட்சியில் இருந்து விலகினார்.

போர்க்கொடி


புதிய அவைத் தலைவராக ஆடிட்டர் அர்ஜுன ராஜை, வைகோ நியமித்தார். பின்னர், வாரிசு அரசியலை எதிர்த்து, வைகோவுடன் 'பொடா'வில் சிறைக்கு சென்ற முன்னாள் இளைஞர் அணி மாநில செயலர் 'பொடா' அழகு சுந்தரம், மாவட்டச் செயலர்கள் செங்குட்டுவன், புலவர் செவ்வந்தியப்பன், முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை சந்திரசேகர் உள்ளிட்ட 17 நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கினர்.

அவர்கள் தி.மு.க.,வில் இணைய விரும்பி, தி.மு.க., தலைமையிடம் கடிதம் வழங்கினர்.

தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., இருப்பதால், அவர்களை சேர்க்காமல், கடிதத்தை காத்திருப்போர் பட்டியலில் தி.மு.க., வைத்தது. இந்நிலையில், துரைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கினால், தி.மு.க., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க., விலகி, பா.ஜ., கூட்டணியில் இணையும் என தகவல் வெளியானது.

சட்டசபை தேர்தலில் கட்சி அங்கீகாரம் பெற, 12 தொகுதிகளை தி.மு.க.,விடம் பெற வேண்டும் என, ம.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தி.மு.க., தலைமை, ம.தி.மு.க., விற்கு 'செக்' வைக்கும் வகையில், திருப்பூர் ம.தி.மு.க., மாவட்ட நிர்வாகி முத்துரத்தினத்தை தி.மு.க.,வில் சேர்த்தது.

தள்ளிவைப்பு


அதை கண்டு அதிர்ச்சி அடைந்த வைகோ, 'ம.தி.மு.க.,விலிருந்து வெளியேறியவர்களை தி.மு.க.,வில் சேர்க்க வேண்டாம்' என, முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கட்சியில் இணைய, கடிதம் கொடுத்த 17 பேரை சேர்க்கும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

இதனால், ம.தி.மு.க., விலிருந்து வெளியேற்றப்பட்ட 17 பேரும், அண்ணா மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சி துவக்க திட்டமிட்டுள்ளனர். அத்துடன், தமிழகம் முழுதும் ம.தி.மு.க., அதிருப்தியாளர்களை சந்தித்து, கட்சியில் சேர்க்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், தி.மு.க.,வை விமர்சிப்பது போல, மறைமுகமாக தன் ஆதங்கத்தை ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ வெளிப்படுத்தி வருகிறார்.

இதனால், ம.தி.மு.க., எந்த நேரத்திலும் தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறும் நிலை உருவாகலாம். அப்படியொரு சூழலில், அண்ணா ம.தி.மு.க.,விலிருக்கும் நிர்வாகிகளை, தி.மு.க.,வில் சேர்த்துக்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஒருவேளை, தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., தொடருமானால், தி.மு.க., கூட்டணியை ஆதரிக்கும் கட்சிகளில் ஒன்றாக, அண்ணா ம.தி.மு.க.,வை பயன்படுத்திக் கொள்ளவும் தி.மு.க., தரப்பில் புது வியூகம் வகுக்கப்பட்டு உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us