ADDED : மார் 17, 2024 07:20 AM

லோக்சபா தேர்தல் செலவு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என கணக்கிட்டுள்ளனர். அமெரிக்க தேர்தல் செலவும் நமது தேர்தல் செலவும் சமம். இங்கே பணமாகவும், பொருளாகவும் கொடுக்கும் லஞ்சம் இந்த கணக்கில் வராது
இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை அமெரிக்கா, ஐரோப்பா ரஷ்யா ஆகியவற்றின் மொத்த ஜனத்தொகையை விட அதிகம். உலகின் மிகப்பெரிய தேர்தல் இது தான்.
என்றாலும், இதுவரை அதிகபட்சமாக 67 சதவீதம் பேர் தான் ஓட்டு போட்டுள்ளனர்
அறிவிப்பு வெளியான நேற்று முதல் ரிசல்ட் வெளியாகும் வரை 81 நாட்கள் நடக்கிறது உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகள் 2,660. அத்தனை கட்சிகள் களம் இறங்கியும், சென்ற தேர்தலில் ஒரு தொகுதியாவது ஜெயித்த கட்சிகள் வெறும் 67 தான்
வேட்பாளர்கள் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருந்தால், அந்த விபரங்களை முக்கிய நாளிதழ்களில் விளம்பரமாக மூன்று நாட்கள் வெளியிட வேண்டும்.

