ADDED : ஜூன் 02, 2025 03:58 AM

கோவை: கோவையில், மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:
நகர்ப்புற நக்சலிஸம் பரவி வருகிறது. பயங்கரவாதம் எந்த உருவில் வந்தாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் தேச விரோத சக்தியை ஊக்குவிப்பது தான், பல அரசியல் தலைவர்களின் முதல் வேலையாக இருக்கிறது.
மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என சொல்வதே தவறு; அது ஒன்றிய அரசு என்றால், மாநில அரசு என்ன பஞ்சாயத்து அரசா? வேண்டுமென்றே பிரிவினைவாதத்தை திணிக்கிறீர்கள். எப்போதும் இல்லாத மொழிபெயர்ப்பை இப்போது ஏன் தருகிறீர்கள்?
கமல்ஹாசனுக்கு எல்லாம் ஒரு கவர்னர் பதில் சொல்ல வேண்டுமா? எப்போதாவது, ஏதாவது ஒன்றை, அவர் ஒழுங்காக சொல்லி இருக்கிறாரா? 'திராவிட இயக்கத்தை ஒழிப்பது தான் என் வேலை' என, கட்சியை ஆரம்பித்தார்.
'தி.மு.க.,வுடன் இருப்பது தான் தமிழகத்துக்கு நன்மை பயக்கும்' என, இப்போது கூறுகிறார். இவருக்கு எது நன்மை பயக்கிறதோ, அது தமிழகத்தின் நன்மை என நினைப்பவரை பற்றி என்ன சொல்வது? பேசும்போது, நிதானத்தை அவர் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.