sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

காஷ்மீரின் ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கு சீனாவுக்கு சொந்தமா? 1963 ஒப்பந்தம் சட்டவிரோதம் என்கிறது மத்திய அரசு

/

காஷ்மீரின் ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கு சீனாவுக்கு சொந்தமா? 1963 ஒப்பந்தம் சட்டவிரோதம் என்கிறது மத்திய அரசு

காஷ்மீரின் ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கு சீனாவுக்கு சொந்தமா? 1963 ஒப்பந்தம் சட்டவிரோதம் என்கிறது மத்திய அரசு

காஷ்மீரின் ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கு சீனாவுக்கு சொந்தமா? 1963 ஒப்பந்தம் சட்டவிரோதம் என்கிறது மத்திய அரசு

1


ADDED : ஜன 14, 2026 01:53 AM

Google News

ADDED : ஜன 14, 2026 01:53 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'ஜம்மு - காஷ்மீரின் ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கை சீனா உரிமை கோருவதை ஏற்க முடியாது. இது தொடர்பாக, பாகிஸ்தான் - சீனா இடையே 1963ல் மேற்கொள்ளப்பட்ட எல்லை ஒப்பந்தம் சட்டவிரோதமானது' என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பல்வேறு திட்டங்கள்

நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன், சீனா மிகுந்த நெருக்கம் காட்டி வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்து பாகிஸ்தானின் கவடார் துறைமுகம் வரை, பல கோடி ரூபாய் மதிப்பில் மாபெரும் உள்கட்டமைப்பு திட்டமான சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் உருவெடுத்துள்ளது.

இது, சாலை, ரயில்வே, எண்ணெய் குழாய்கள் உட்பட பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய மிகப் பெரிய உள்கட்டமைப்பு. இந்த திட்டம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கு வழியே செயல்படுத்தப்பட உள்ளதால், அப்பகுதியை சீனா சொந்தம் கொண்டாட துவங்கியுள்ளது.

பாகிஸ்தான் - சீனா இடையே 1963ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட எல்லை வரையறை ஒப்பந்தத்தின் அடிப்படையில், அப்பகுதி தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என, சீனா கூறி வருகிறது.

எல்லை உடன்பாட்டின் அடிப்படையில், ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கின் கட்டுப்பாட்டை, பாகிஸ்தான் தங்கள் வசம் ஒப்படைத்துவிட்டதாகவும் சீனா கூறுகிறது. இதற்கு மத்திய அரசு கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகிறது.

'ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கு இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம். கடந்த 1963ல் போடப்பட்ட பாகிஸ்தான் - சீனா எல்லை உடன்பாடு சட்டவிரோதமானது. அதை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை' என, நம் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விவகாரம் குறித்து பேசிய நம் ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, ''1963ல் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தம் செல்லத்தக்கது அல்ல. எனவே, அப்பகுதியில் எந்தவொரு உள்கட்டமைப்பு திட்டப் பணிகளையும் துவக்குவதற்கு இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. அப்படி செய்வது சட்டவிரோதமானது,'' என்றார்.

ஏற்க முடியாது

இந்தச் சூழலில், ஜம்மு - காஷ்மீரின் ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கு தங்களுக்கு சொந்தமானது என்றும், அங்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவோம் என்றும் சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் மீண்டும் தெரிவித்துள்ளார்.

சீனாவின் இந்த கருத்துக்கு நம் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கடும் ஆட்சேபனை தெரிவித்து உள்ளார். ''ஒட்டுமொத்த ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள், இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம். இதை பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் பலமுறை எடுத்துரைத்து விட்டோம். இரு நாட்டுக்கும் இடையே ஏற்பட்ட எல்லை ஒப்பந்தம் சட்டவிரோதமானது.

''செல்லத்தக்கதும் அல்ல. எனவே, இந்திய பகுதி வழியாக உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்வது சட்டவிரோத செயலாகும். அதை ஒருபோதும் ஏற்க முடியாது,'' என அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us