sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

வாக்குவாதம் செய்யாதீங்க; சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நன்னடத்தை பயிற்சி

/

வாக்குவாதம் செய்யாதீங்க; சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நன்னடத்தை பயிற்சி

வாக்குவாதம் செய்யாதீங்க; சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நன்னடத்தை பயிற்சி

வாக்குவாதம் செய்யாதீங்க; சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நன்னடத்தை பயிற்சி

2


ADDED : ஜூலை 20, 2025 03:17 AM

Google News

2

ADDED : ஜூலை 20, 2025 03:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, நன்னடத்தை பயிற்சி அளிக்கப்பட்டது.மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை வாரியம் செயல்படுகிறது.

அரசுக்கு வருவாய் இழப்பு விளைவிக்கும் நோக்கில் செயல்படும் அனைத்து செயல்களையும் கண்காணித்து மீட்பது, அவர்களது பணி. பெரும்பாலும் விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகிய இடங்களில், சுங்கத்துறை அதிகாரிகள் பணியில் இருப்பர்.

பறிமுதல்


அதிலும், வெளிநாடுகளுக்கு சென்று, விமானங்களில் தங்கம், எலக்ட்ரானிக்ஸ், போதைப் பொருள் போன்றவற்றை கடத்துவோரை பிடித்து, கடத்தல் பொருட்களைப் பறிமுதல் செய்வர்.

சுங்கத்துறை அதிகாரிகள், பயணியரை விசாரிப்பதற்கு முழு அதிகாரம் உள்ளது. ஆனால் பணிச்சுமை, பயணியர் ஒத்துழைப்பு இல்லாதது போன்ற, பல்வேறு காரணங்களால், அதிகாரிகள் பயணியரிடம் சத்தமிடுவது, வாக்குவாதம் செய்வது, கோபமாக நடந்து கொள்வது போன்ற சம்பவங்கள், அவ்வப்போது நடந்து வந்தன.

சென்னை விமான நிலையத்தில், கடந்த காலங்களில் இருந்த சுங்க அதிகாரிகள் சிலர், இலங்கை பெண் பயணியிடம், தாலி செயினை வற்புறுத்தி கழட்ட வைத்து பறிமுதல் செய்த சம்பவம், சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளுக்கான நன்னடத்தை பயிற்சி, கடந்த 15ம் தேதி முதல் மூன்று நாள் நடந்தது. இதில் பயணியரை பொறுமையாக கையாள்வது, கோபப்படாமல் நிதானமாக விசாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

அனுபவம்


இது குறித்து, சுங்கத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:


பயணியருக்கு சுங்கத்துறையால் முன்பு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், அவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், என்.ஏ.சி.ஐ.டி., அகாடமியுடன் இணைந்து, சுங்கத் துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக விமானத்தில் களைத்து போய் வரும் பயணியர், சோதனை என்றாலே சிரமமாக பார்ப்பர். அப்போது நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்காமல் வாக்குவாதம் செய்வர்.

இப்படிப்பட்ட சூழலை, எப்படி கையாள வேண்டும் என தெளிவுப்படுத்தி உள்ளோம். குழுவாக இணைந்து பணி செய்ய வேண்டும். மதம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகாரிகள் எதிர்கொள்ளும்

10 'டாப்' சவால்கள் பயணியர் வெளிப்படுத்தும் கோபம் விசாரணையின் போது ஒத்துழைக்க மறுத்தல் உடைமைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை வீண் வாதம் முக்கிய பிரமுகருக்கு வேண்டப்பட்டவர்கள் எனக் கூறி சோதனைக்கு மறுப்பது  பொருட்களுக்கு வரி செலுத்துவது குறித்த விழிப்புணர்வு இல்லாதது சமூக வலைதளத்தில் பதிவிடுவேன் என மிரட்டுவது பயணியர் முன் சத்தமிட்டு திசை திருப்புதல் தெரியாதது போல நடந்து கொள்ளுதல் எவ்வளவு பொருட்கள் எடுத்து வரலாம் என்பது தெரியாதது.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us