தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ஏ.ஐ., தொழில்நுட்பத்தை கண்டு கவலை வேண்டாம்: சத்குரு

ஏ.ஐ., தொழில்நுட்பத்தை கண்டு கவலை வேண்டாம்: சத்குரு

ஏ.ஐ., தொழில்நுட்பத்தை கண்டு கவலை வேண்டாம்: சத்குரு


UPDATED : நவ 30, 2025 07:11 AM

ADDED : நவ 30, 2025 01:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2025 07:11 AM ADDED : நவ 30, 2025 01:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ''நீங்கள் ஒரு தொழில் முனைவோராக இருந்தால், ஏ.ஐ., பற்றி கவலைப்பட தேவையில்லை,'' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார்.

சத்குரு அகாடமி சார்பில், 'இன்சைட்' எனும் தொழில் முனைவோருக்கான தலைமைத்துவம் தொடர்பான நிகழ்ச்சி, கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தலைமை வகித்து பேசியதாவது:

உலகம், வர்த்தகத்தை மையமாக கொண்டதாக மாறியுள்ளது. வணிகங்கள் எதிர்காலத்திற்கு உரியதாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏனென்றால், அவைதான் உலகின் முன்னணி விளிம்பாக இருக்கின்றன. ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம், 'அறிவுசார் கூலிகளின்' அதிகாரம் விரைவில் மறையப்போகிறது.

இயந்திரத்தால் செய்ய முடியாதவற்றை செய்ய, உங்கள் மூளையையும், புத்திசாலித்தனத்தையும் இனி பயன்படுத்த வேண்டும். இயந்திரங்கள் வந்தால் எல்லாம் போய்விடும் என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் தரவு சார்ந்த வேலைகள் மட்டுமே போகும்.

ஒரே ஒரு வேலைக்கான நேர்காணலை சரியாக செய்து விட்டால், வாழ்க்கையில் 'செட்டில்' ஆகிவிடுவோம் என நினைப்பவர்களுக்குத்தான் இது சவால். நீங்கள் ஒரு தொழில் முனைவோராக இருந்தால், இதை பற்றி கவலைப்பட தேவையில்லை. நீங்கள் நினைத்து பார்க்காத மில்லியன் கணக்கான புதிய வாய்ப்புகளை இது திறக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us