தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/அப்பாவுக்காக தப்பு தப்பாக டப்பா உருட்ட வேண்டாம்: உதயநிதிக்கு தவெக பதில்

அப்பாவுக்காக தப்பு தப்பாக டப்பா உருட்ட வேண்டாம்: உதயநிதிக்கு தவெக பதில்

அப்பாவுக்காக தப்பு தப்பாக டப்பா உருட்ட வேண்டாம்: உதயநிதிக்கு தவெக பதில்

32


ADDED : ஜூன் 13, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2026 05:41 AM

32


32
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'அப்பாவுக்காக, தப்பு தப்பாக, டப்பாவை உருட்ட வேண்டாம்' என, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு, த.வெ.க., கடுமையாக பதிலடி கொடுத்துள்ளது.



த.வெ.க-., - ஐ.டி., அணி அறிக்கை: 'நீட்' தேர்வை நீக்கும் ரகசியம் தெரியும் என, பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய பொய் நிதி, மேலும், பல பொய்களை அவிழ்த்து விடுகிறார். மத்திய அரசால் தான் 'நீட்' தேர்வை நீக்க முடியும். மாநில அரசால் நீக்கவே முடியாது என்பதை மறைத்து, நீட்டை நீக்குவோம் என்ற ரகசிய நிதியின் பேச்சையும், அவரது தந்தையின் பேச்சையும் நம்பி ஏமாற வேண்டாம்.

'நீட்' தேர்வு நீக்கப்படும் வரை, அதை மட்டுமே நம்பி மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்பதற்காகத்தான் 'நீட் மட்டுமே உலகம் இல்லை' என, விஜய் கூறினார். இதை திரித்துக் கதை கட்டி விட்டிருக்கிறார், திரிபுவாத நிதி.

ஜெயலலிதா திட்டங்களுக்கு, 'ஸ்டிக்கர்' ஒட்டிய தீயசக்தி, தன்னைப் போலவே பிறரையும் நினைக்கிறது. அந்த பிதற்றலைத்தான் 'ஸ்டிக்கர்' நிதி, ஸ்பீக்கர் நிதியாக மாறி, 'ரிபீட் மோடில்' கீழே விழுந்து பல்லை உடைத்து கொள்கிறார்.

'நிடி ஆயோக்' கூட்டத்தில் கலந்து கொள்ளாத முதல்வர் இல்லை விஜய். எனவே தன் அப்பாவுக்காக தப்பு தப்பாக டப்பாவை உருட்ட வேண்டாம். இதோடு, நிறுத்திக் கொள்ளுங்கள், புளுகு நிதி. இல்லையேல் மக்கள் உங்களை மேலும் புறந்தள்ளி, ஓரமாக அமர வைத்துவிடுவர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us