தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/எம்.எல்.ஏ.,க்களை இழுத்தது தான் அரசின் சாதனை: சட்டசபையில் பழனிசாமி ஆவேசம்

எம்.எல்.ஏ.,க்களை இழுத்தது தான் அரசின் சாதனை: சட்டசபையில் பழனிசாமி ஆவேசம்

எம்.எல்.ஏ.,க்களை இழுத்தது தான் அரசின் சாதனை: சட்டசபையில் பழனிசாமி ஆவேசம்

4


UPDATED : ஆக 12, 2026 03:33 PM

ADDED : ஆக 12, 2026 04:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2026 03:33 PM ADDED : ஆக 12, 2026 04:06 AM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''ஒரு கட்சியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைத்தது தான், இந்த அரசின் சாதனை,'' என, அ.தி .மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்



அ.தி.மு.க., - பழனிசாமி: மூன்று மாதங்களில், 24,000 கோடி ரூபாய்க்கு மேல் த.வெ.க., அரசு கடன் வாங்கியுள்ளது. இந்நிலை தொடர்ந்தால், ஐந்தாண்டுகளில், 25 லட்சம் கோடி ரூபாயாக கடன் அளவு உயரக்கூடும்.

பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லாமல், அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு பெயர் சூட்டியுள்ளனர். தேர்தல் பிரசாரத்தில், 'மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதுமா' என, முதல்வர் விஜய், அப்போதைய அரசை விமர்சித்தார். தற்போது அவரும் அதையே செய்கிறார்.

அரசு பஸ்களின் ஆயுள் காலத்தை, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்ததை விட, தி.மு.க., அரசு உயர்த்தியது. தற்போது, ஏழு ஆண்டுகள், 12 லட்சம் கி.மீ., வரை இயக்கலாம் என, உள்ளது. ஆனால், அதையும் தாண்டி தான் பல பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே, புதிய பஸ்கள் வாங்க வேண்டும்.

அமைச்சர் பார்த்திபன்: புதிதாக, 1,000 'ஏசி' மின்சார பஸ்கள் வாங்கப்பட உள்ளன.

பழனிசாமி: ஒவ்வொரு ஆண்டும், 1,000 பஸ் என்றால், ஐந்தாண்டுகளில், 5,000 தான் வாங்க முடியும். ஆனால், 20,000 பஸ்கள் புதிதாக வாங்கப்பட வேண்டும். ஆனால், முதல்வராக இருந்ததால் தெரிவிக்கிறேன். இருக்கும் நிதிநிலை பிரச்னையில் அது சாத்தியம் இல்லை.

அமைச்சர் பார்த்திபன்: அனைத்து தரப்பு மக்களும் குளிர்சாதன பஸ்களில் பயணிக்கும் காலம் வரும். அதற்கான சாத்தியக்கூறு இருப்பதால் தெரிவிக்கிறேன்.

பழனிசாமி: ஒரு கட்சியில் வெற்றி பெற்ற பின், ராஜினாமா செய்து உடனே வேறு கட்சியில் சேருகின்றனர். மூன்று மாதங்களில், இந்த அரசு செய்த சாதனை இதுதான். வேறு என்னவென்று சொல்வது?

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: 2017ம் ஆண்டு வரை, ஜெயலலிதா ஆட்சியில் எங்களுக்கு உடன்பாடு உண்டு. அதற்கு பிந்தைய ஆட்சிக்கும், எங்களுக்கும் உடன்பாடு இல்லை. அது உண்மையான அ.தி.மு.க., கிடையாது. ஜெயலலிதா இருந்தவரை, 'நீட்' தேர்வு, ஜி.எஸ்.டி., வரி கொண்டு வரப்படவில்லை.

அதன்பின், தமிழகத்தின் நலனுக்கு எதிராக டில்லியுடன் சரண்டராகி விட்டீர்கள். உங்கள் மீதும், தலைமை மீதும் நம்பிக்கை இருந்தால், எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வை நோக்கி வர வேண்டிய அவசியம் இல்லை.

அ.தி.மு.க., தொண்டர்களும், த.வெ.க.,வில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ஒரு கட்சி மற்றும் தலைமை மீது நம்பிக்கை இழக்கும் போது, அக்கட்சியில் இருந்து விலகி, மாற்று கட்சிக்கு செல்வது இயல்பானது.

சபாநாயகர் பிரபாகர்: தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டு பேரும் சேர்ந்து பேசுவது, எனக்கு தெரியும்.

தி.மு.க., - எ.வ.வேலு: நாங்கள் யாருடனும் சேரவில்லை. நீதிமன்றத்தில் ஒரு வார்த்தையை மையப்படுத்தி தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதையே குறிப்பிட்டோம். மற்றபடி எந்த உள்நோக்கமும் எங்களுக்கு இல்லை.

பழனிசாமி: தேர்தலில் ஒருவரை வெற்றி பெற வைக்க, 6,000 பேர் வரை பணியாற்ற வேண்டும். இரவு பகல் பாராமல் பணியாற்றிய தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், தலைவர்களை ஏமாற்றி ராஜினமா செய்ததை எப்படி சொல்வது? தி.மு.க.,வுடன் இதற்கு முன்னும் சேர்ந்ததில்லை. தற்போதும் சேர்ந்து பணியாற்றவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.

இதில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அ.தி.மு.க., தலைமை குறித்து பேசியதை கண்டித்து, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கோஷமிட்டனர். ஆதவ் அர்ஜுனா பேசியதை சபைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றனர். ஆய்வு செய்து, தேவையானதை எடுத்து கொள்வதாக, சபாநாயகர் அறிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us