உஷார்: போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 'பைன்'
உஷார்: போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 'பைன்'
ADDED : ஜன 15, 2024 02:55 AM

சென்னை: விபத்து தடுப்பு நடவடிக்கையாக, மாநிலம் முழுதும், 'ஸ்டார்மிங் ஆபரேஷன் என, குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் மீது அபராதம் விதிக்க வேண்டும்' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
போலீசார் எடுத்த நடவடிக்கை காரணமாக, சாலை விபத்தில் உயிரிழப்புகள் இல்லை என்ற நிலையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அதேபோல, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போதும், குடிபோதையால் வாகனம் ஓட்டி உயிரிழப்புகள் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
அதற்கு ஏற்ப, மாநிலம் முழுதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். 'ஸ்டார்மிங் ஆபரேஷன்' என, குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு வாகனம் ஓட்டுபவர்களுக்கு தலா, 10,000 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.