தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/தி.மு.க.,வுக்கு எதிர்பார்க்கும் ஓட்டுகள் கிடைக்குமா?: உதயநிதி அதிரடி திட்டம்

தி.மு.க.,வுக்கு எதிர்பார்க்கும் ஓட்டுகள் கிடைக்குமா?: உதயநிதி அதிரடி திட்டம்

தி.மு.க.,வுக்கு எதிர்பார்க்கும் ஓட்டுகள் கிடைக்குமா?: உதயநிதி அதிரடி திட்டம்


UPDATED : ஜன 24, 2025 06:28 AM

ADDED : ஜன 24, 2025 05:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 24, 2025 06:28 AM ADDED : ஜன 24, 2025 05:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பதிவாகும் மொத்த ஓட்டுகளில், 80 சதவீதம் ஓட்டுகளை பெற, துணை முதல்வர் உதயநிதி தரப்பில் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்., - எம்.எல்.ஏ.,வும், மூத்த தலைவருமான இளங்கோவனின் மறைவைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு பிப்., 5 இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

அதிர்வலை


பிப்., 8 ஓட்டு எண்ணிக்கை நடக்கும். பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க.,- த.வெ.க., போன்றவை, இடைத்தேர்தலை புறக்கணித்து உள்ளன. இதனால், ஆளுங்கட்சியான தி.மு.க.,வுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே, நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. ஈ.வெ.ராமசாமிக்கு எதிராக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது, தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

'திராவிடமா, தமிழ்த்தேசியமா', 'பெரியார் புராணமா, பெரிய புராணமா' என்ற பாணியில், தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள சீமான் திட்டமிட்டுஉள்ளார். ஈ.வெ.ராமசாமி எதிர்ப்புக் கொள்கையை, சீமான் கையில் எடுத்துள்ளதால், அவரது கட்சிக்கு பா.ஜ., ஓட்டுகள் மொத்தமாக விழ வாய்ப்புள்ளது.

போதுமானது


இதனால், தி.மு.க., தரப்பு எதிர்பார்த்த ஓட்டுகளில் ஓட்டை விழும் என தி.மு.க., தரப்பில் அச்சம் கொள்ளத் துவங்கி உள்ளனர். இந்த சூழ்நிலையில், இடைத்தேர்தலில் பதிவாகும் மொத்த ஓட்டுகளில், 80 சதவீதம் ஓட்டுகளைப் பெற்றுவிட வேண்டும் என, துணை முதல்வர் உதயநிதி திட்டமிடப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த முறை நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு, பதிவான ஓட்டுகளில் 65 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தன. இந்த இடைத்தேர்தலில், தி.மு.க., போட்டியிடுவதால், 80 சதவீதம் ஓட்டுகளை அள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில், பிரதான எதிர்க்கட்சிகள் போட்டியிடாததால், ஆளுங்கட்சி தரப்பில் அமைச்சர்கள் பட்டாளத்தை, தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த, முதல்வர் விரும்பவில்லை.

அவரும் பிரசாரத்திற்கு செல்லவில்லை. துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் சிலர் மட்டும், கடைசி 3 நாட்கள் பிரசாரம் செய்யலாம் என, திட்டமிடப்பட்டுஉள்ளது. எதிர்பார்க்கும் அளவுக்கான ஓட்டுகளைப் பெற அதுவே போதுமானது எனவும் நம்புகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நோட்டாவுக்கு அ.தி.மு.க., ஓட்டுகள்:


விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க.,வுக்கு எதிராகப் போட்டியிட்ட பா.ம.க., விற்கு, அ.தி.மு.க., ஓட்டுகள் செல்லாமல், தி.மு.க., தன் வசம் வளைத்தது. அதே பாணியை ஈரோடு கிழக்கு தொகுதியில் பின்பற்ற, தி.மு.க., திட்டமிட்டுள்ளது. வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைக்க, சீமானும் விரும்பவில்லை. எனவே, நாம் தமிழர் கட்சிக்கு, அ.தி.மு.க., ஓட்டுகள் செல்வதை, கட்சித் தலைமை விரும்பவில்லை.
எனவே, ஓட்டளிக்க விரும்பும் அ.தி.மு.க.,வினர் நோட்டா அல்லது தங்களுக்கு பிடித்த சுயேட்சைகளுக்கு ஓட்டளிக்கலாம் என, கட்சித் தலைமை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us