sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

மீனவர்கள் ஓட்டுகளுக்கு வலை வீசும் சீமான்; நடுக்கடலுக்கு சென்று 'மீனவர்கள் மாநாடு'

/

மீனவர்கள் ஓட்டுகளுக்கு வலை வீசும் சீமான்; நடுக்கடலுக்கு சென்று 'மீனவர்கள் மாநாடு'

மீனவர்கள் ஓட்டுகளுக்கு வலை வீசும் சீமான்; நடுக்கடலுக்கு சென்று 'மீனவர்கள் மாநாடு'

மீனவர்கள் ஓட்டுகளுக்கு வலை வீசும் சீமான்; நடுக்கடலுக்கு சென்று 'மீனவர்கள் மாநாடு'

7


ADDED : ஜூலை 19, 2025 03:38 AM

Google News

7

ADDED : ஜூலை 19, 2025 03:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சட்டசபை தேர்தலில், மீனவர்களின் ஓட்டுகளை வளைக்க, நடுக்கடலில் மீனவர்களுடன், ஒரு வாரம் பயணித்து, மீன் பிடித்து, அவர்களின் ஓட்டுகளுக்கு வலை வீசும் வகையில், 'மீனவர்கள் மாநாடு' நடத்த, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

வரும் 2026 சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சி, தனித்து போட்டியிட்டு, 25 தொகுதிகளை கைப்பற்றி, கூட்டணி ஆட்சி அமைக்க, சீமான் தேர்தல் வியூகம் அமைத்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, இயற்கை வளம், மண், கடல் வளம் சார்ந்த வாழ்வியல் மற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ள, மக்களின் ஓட்டுகளை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

25 சதவீத ஓட்டு


முதல் கட்டமாக, துாத்துக்குடி மாவட்டம், பெரியதாழையில் பனை மரம் ஏறி கள் இறக்கி, தென்னை, பனை சார்ந்த விவசாயிகளின் ஓட்டுகளை மையப்படுத்தி போராட்டம் நடத்தினார்.

இரண்டம் கட்டமாக, மண், பால் வளம் சார்ந்த தொழில் புரியும் மக்களின் ஓட்டுகளை வளைக்க, மதுரையில் கால்நடைகள் மாநாடு நடத்தினார்.

ஆக., 17ம் தேதி 10,000 மரங்களுடன் மாநாடு நடத்தி, மரங்களுடன் சீமான் பேச உள்ளார். மரங்கள் வாழ்ந்தால் தான், நாட்டில் மழை பெய்யும்; விவசாயம் செழிக்கும். சுற்றுச்சூழல் நன்றாக இருக்கும் என்பதால், மரங்களுக்கான மாநாட்டை நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.

இதன் அடுத்த கட்டமாக, வரும் செப்டம்பரில் மீனவர்களின் நலனுக்காகவும், அவர்களின் ஓட்டுகளை பெறவும், நடுக்கடலில் மீனவர்களுடன் ஒரு வாரம் பயணித்து, மீன் பிடித்து, மீனவர்கள் மாநாடு நடத்த, சீமான் திட்டமிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:


எம்.ஜி.ஆர்., காலத்திற்கு பின், அ.தி.மு.க., ஓட்டு கள் ஜெயலலிதாவுக்கு கிடைத்தன. அவரது மறைவுக்கு பின், தி.மு.க.,வுக்கும், சீமான் கட்சிக்கும், மீனவர்களின் ஓட்டுகள் கிடைத்து வருகின்றன.

கடந்த லோக்சபா தேர்தலில், மீனவ சமுதாயத்தினர் அடர்த்தியாக வசிக்கும் தொகுதிகளில், தி.மு.க.,வினருக்கு 55, நாம் தமிழர் கட்சிக்கு, 25 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தன.

கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில், மீனவர் சமுதாயத்தை சேர்ந்த மரிய ஜெனிபர், நா.த.க., சார்பில் போட்டியிட்டு, மூன்றாம் இடம் பிடித்தார்.

கடலோர மாவட்டங்களான, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, துாத்துக்குடி உட்பட13 மாவட்டங்களில், 23 சட்டசபை தொகுதிகளில், மீனவர்களின் ஓட்டுகள் 1 சதவீதம் உள்ளது.

புது கோஷம்


த.வெ.க., தலைவர் விஜய், மீனவர்களின் நலனுக்காக, சுறா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதால், அவரது கட்சிக்கு, மீனவர் சமுதாய ஓட்டுகள் மடை மாற்றமாகி விடக் கூடாது என்பதற்காகவும், தன் கட்சிக்கு ஏற்கனவே கிடைத்த ஓட்டுகளை தக்க வைக்கவும், மீனவர்கள் மாநாட்டை சீமான் நடத்த உள்ளார்.

செப்., மாதம் துாத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கடலிலிருந்து, ராமேஸ்வரம் வரை, ஒரு வாரம் நடுக்கடலில் மீன் பிடிக்கிறார். கரையில் இறங்கிய பின், மீனவ கிராமங்களில், அவர்களின் வீடுகளில் தங்கி, சாப்பிடுகிறார்.

பின் ராமேஸ்வரத்தில், 'மீனவர் பாதுகாப்பே மானத்தமிழர் பாதுகாப்பு' என்ற கோஷத்துடன் மாநாடு நடத்த உள்ளார்.

மாநாட்டில், படகோட்டி படத்தில் மீனவராக வரும் எம்.ஜி.ஆர்., அணிந்த, மீனவர்களின் பாரம்பரிய உடையை, சீமான் அணிந்து, தோளில் வலையுடன் நின்று பேச திட்டமிட்டுள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us