தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ பா.ஜ.,வில் இணையும் மார்க்சிஸ்ட் கம்யூ., மாஜி எம்.எல்.ஏ.

 பா.ஜ.,வில் இணையும் மார்க்சிஸ்ட் கம்யூ., மாஜி எம்.எல்.ஏ.

 பா.ஜ.,வில் இணையும் மார்க்சிஸ்ட் கம்யூ., மாஜி எம்.எல்.ஏ.


UPDATED : ஜன 11, 2026 09:25 PM

ADDED : ஜன 11, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 11, 2026 09:25 PM ADDED : ஜன 11, 2026 05:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூணாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த மாஜி எம்.எல்.ஏ.,ராஜேந்திரன் பா.ஜ.க.வில் இணைகிறார்.

இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக தமிழர் இருந்து வருகின்றனர். அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த ராஜேந்திரன் 2006 முதல் 2021 வரை தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் கடந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்ததால் கட்சி உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளையும் இழந்தார்.

நெருக்கம்: தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரனுடன் பல ஆண்டுகளாக நெருக்கத்தில் உள்ள ராஜேந்திரன் பா.ஜ. கேரள மாநில பொறுப்பாளர் பிரகாஷ்ஜவடேகர் உள்பட பா.ஜ. பிரமுகர்களை சந்தித்து வந்தார். அதனால் அவர் பா.ஜ.வில் இணைய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் பா.ஜ. கேரள மாநில தலைவர் ராஜீவ்சந்திரசேகரை சந்தித்து ஆலோசனை நடத்தியவர், அக்கட்சியில் இணைய உள்ளதாக தெரிவித்தார்.

மத்திய அரசு சார்பிலான வின்னர்ஸ் ராயல் வர்ஷா கிரெடிட் கூட்டுறவு சங்கத்தை ராஜேந்திரன் துவங்கிறார். அதன் திறப்பு விழாவுக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியை அழைத்து வர ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பா.ஜ., கேரள மாநில தலைவரை சந்தித்தபோது ராஜேந்திரன் தொகுதி சார்ந்த மக்கள் பயன் அளிக்கும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us