sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

ரூ.7,000 கோடியை விழுங்கும் இலவச மின்சாரம்; வசதி படைத்த விவசாயிகளுக்கு வருமா தடை?

/

ரூ.7,000 கோடியை விழுங்கும் இலவச மின்சாரம்; வசதி படைத்த விவசாயிகளுக்கு வருமா தடை?

ரூ.7,000 கோடியை விழுங்கும் இலவச மின்சாரம்; வசதி படைத்த விவசாயிகளுக்கு வருமா தடை?

ரூ.7,000 கோடியை விழுங்கும் இலவச மின்சாரம்; வசதி படைத்த விவசாயிகளுக்கு வருமா தடை?

18


ADDED : டிச 26, 2024 01:46 AM

Google News

ADDED : டிச 26, 2024 01:46 AM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : விவசாயத்துக்கு வழங்கப்படும், 'தத்கல்' எனப்படும் விரைவு திட்டத்தில், அதிகபட்சம், 15 குதிரை திறன் மோட்டார் பம்ப் வரை மின் இணைப்பு வழங்கப்படுகிறது.

மொத்தம் உள்ள, 23.55 லட்சம் விவசாய மின் இணைப்புகளில், 1,244 இணைப்புகள், 30 குதிரை திறனுக்கு மேல் உள்ளன. இதனால், அதிக ஏக்கரில் நிலம் வைத்துள்ள வசதி படைத்தவர்களும், விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் விவசாயத்துக்கு சாதாரணம், சுயநிதி ஆகிய பிரிவுகளில், மின் இணைப்பு வழங்கப்படுகிறது. சாதாரண பிரிவில் மின் வழித்தட செலவு, மின்சாரம் இலவசம். சுயநிதி பிரிவில் வழித்தட செலவில், ஒரு பகுதியை விவசாயிகள் செலுத்த வேண்டும்; மின்சாரம் மட்டும் இலவசம்.

விவசாய இலவச மின்சாரத்திற்காக மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் அரசு அனுமதிக்கும் எண்ணிக்கையில் தான் மின் இணைப்பு வழங்கப்படுகிறது.

ஆண்டுக்கு, 30,000 - 40,000 இணைப்புகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், 2021 - 22ல் ஒரு லட்சம், அடுத்த இரு ஆண்டுகளில் தலா, 50,000 இணைப்புகள் வழங்கப்பட்டன. மொத்தம், 23.55 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன.

இவற்றில், 1,244 இணைப்புகள், 30 குதிரை திறனுக்கு மேல் உள்ளன. இதனால், வசதி படைத்தவர்களும் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:


விவசாய மின்சாரத்திற்கு ஆண்டுக்கு, 7,000 கோடி ரூபாய் செலவாகிறது. சிலர், விவசாய மின்சாரத்தை பயன்படுத்தி எடுக்கப்படும் தண்ணீரை, விவசாயத்திற்கு மட்டுமின்றி, குடிநீர் விற்கும் நிறுவனங்களுக்கும், கட்டுமான நிறுவனங்களுக்கும் விற்பதாக புகார்கள் வருகின்றன.

விவசாய மின் இணைப்பு வழங்க, அரை ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். குதிரை திறனுக்கு வரம்பு இல்லை. சில இடங்களில் பூமிக்கு கீழ் குறைந்த அடியிலும், பல இடங்களில் அதிக அடியிலும் தண்ணீர் கிடைக்கிறது.

எனவே, பொதுப்பணி துறை, நீர் வளத்துறை, விவசாய துறை, மின் வாரியம் ஒருங்கிணைந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகபட்சம் எத்தனை குதிரை திறனில் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்ற அளவை நிர்ணயம் செய்ய வேண்டும்.

இதன் வாயிலாக, விவசாயத்துக்கு மட்டுமே இலவச மின்சாரம் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.

வசதி படைத்தவர்களின் மின் இணைப்பை ரத்து செய்து, மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

எவ்வளவு திறனில்

எத்தனை இணைப்பு?

குதிரை திறன் விகிதம் - மின் இணைப்புகள்/ லட்சத்தில்

-------------------------------------------------

3 வரை - 1.57

3 முதல் 5 வரை - 7.64

5 முதல் 7.50 வரை - 7.82

7.50 முதல் 10 வரை - 4.20

10 முதல் 12.50 வரை - 1.10

12.50 முதல் 15 வரை - 71,919

15 முதல் 17.50 வரை - 16,890

17.50 முதல் 20 - வரை - 19,401

20 முதல் 30 வரை - 10,152

30 முதல் 40 வரை - 865

40 முதல் 50 வரை - 168

50 எச்.பி.,க்கு மேல் - 211

மொத்தம் - 23.55 லட்சம்

---






      Dinamalar
      Follow us