sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 தி.மு.க.,வினரின் கிடங்காக மாறிய அரசு பள்ளி வகுப்பறை

/

 தி.மு.க.,வினரின் கிடங்காக மாறிய அரசு பள்ளி வகுப்பறை

 தி.மு.க.,வினரின் கிடங்காக மாறிய அரசு பள்ளி வகுப்பறை

 தி.மு.க.,வினரின் கிடங்காக மாறிய அரசு பள்ளி வகுப்பறை

8


ADDED : பிப் 12, 2026 06:23 AM

Google News

8

ADDED : பிப் 12, 2026 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே, கல்கிணற்று வலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறையில், தி.மு.க.,வினர் பரிசுப் பொருட்களை வைத்துள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக, பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட, தி.மு.க., ஏற்பாட்டில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவி என்ற பெயரில், கிராமங்களில் வீடுதோறும் அண்டா, பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை, தி.மு.க.,வினர் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

மண்டபம் ஒன்றியம், கல்கிணற்று வலசை கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறையை இதற்கான பரிசுப்பொருட்கள் வைக்கும் கிடங்காக, தி.மு.க.,வினர் பயன்படுத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ரவீந்திரன் கூறுகையில், ''பள்ளியில் பரிசுப் பொருட்கள் வைக்கப்பட்டது குறித்து அப்பகுதி வட்டார கல்வி அலுவலர் விசாரிக்கிறார். தலைமையாசிரியரிடம் விளக்கக் கடிதம் கேட்டுள்ளோம். தற்சமயம் அப்பள்ளியில் பரிசுப்பொருட்கள் எதுவும் இல்லை,'' என்றார்.






      Dinamalar
      Follow us