sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

திருப்பரங்குன்றம் மலையிலிருந்து போலீசாரை வாபஸ் பெற வழக்கு; அரசு தரப்பில் பதில் கோரும் உயர்நீதிமன்றம்

/

திருப்பரங்குன்றம் மலையிலிருந்து போலீசாரை வாபஸ் பெற வழக்கு; அரசு தரப்பில் பதில் கோரும் உயர்நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலையிலிருந்து போலீசாரை வாபஸ் பெற வழக்கு; அரசு தரப்பில் பதில் கோரும் உயர்நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலையிலிருந்து போலீசாரை வாபஸ் பெற வழக்கு; அரசு தரப்பில் பதில் கோரும் உயர்நீதிமன்றம்

2


ADDED : ஜன 03, 2026 07:56 AM

Google News

ADDED : ஜன 03, 2026 07:56 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது தன்னிச்சையான கட்டுப்பாடு அல்லது மேற்பார்வை செய்வதிலிருந்து போலீசாரை உடனடியாக விலக்கிக்கொள்ள கோரிய வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.



மதுரை மாவட்டம் எழுமலை ராம.ரவிக்குமார் தாக்கல் செய்த மனு: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வழக்கு தொடர்ந்தேன். அதன்படி தர்கா எல்லையிலிருந்து 60 மீ., தொலைவில் அமைந்துள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் டிச., 1 ல் அனுமதித்தது. மாநில அரசு காவல்துறை இயந்திரத்தின் மூலம் சட்டவிரோதமாக தலையிட்டு, தன்னிச்சையான கட்டுப்பாடுகளை விதித்தது. தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. அது தொடர்பான அரசின் மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தர்காவின் சந்தனக்கூடு திருவிழாவிற்காக கொடியை 30 பேர் நள்ளிரவில் போலீசாரின் பாதுகாப்புடன் மலை உச்சிக்கு கொண்டு சென்றனர். தர்காவின் முன்பகுதியில் கொடியை நட்டனர். கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள கல்லத்தி மரத்தில் தர்காவின் மற்றொரு கொடி கட்டப்பட்டுள்ளது.

இதில் ஹிந்துக்களின் உரிமைகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறது. பாகுபடுத்துவதை உணர்த்துகிறது. நீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் அம்மலையின் மீதான தனது சட்டப்பூர்வ உரிமைகளை நிலைநாட்ட கோயில் நிர்வாகம் தவறி விட்டது. கோயில் சொத்துக்களை பாதுகாக்கும் சட்டப்பூர்வ கடமை அதன் நிர்வாகத்திற்கு உள்ளது.

ஜன., 6 ல் மலை உச்சியில் சந்தனக்கூடு மற்றும் கந்துாரி விழாவை சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் நடத்த உள்ளது. கந்துாரி விழாவை முகமதிய சட்டம் ஊக்குவிப்பதில்லை. இது இஸ்லாமிய வழிபாட்டின் எல்லைக்கு அப்பாற்பட்டது.

எந்த ஒரு நபர் அல்லது குழுவினரை மலைக்குச் செல்ல, ஊர்வலம் நடத்த அல்லது அல்லது பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது. படிக்கட்டுகள், மலையடிவாரம் உள்ளிட்ட கோயிலுக்கு சொந்தமான இடத்தில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள போலீசார் அல்லது அரசின் மாநில அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது என இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலை கோயிலுக்கு சொந்தமானது. மலையின் மீது தன்னிச்சையான கட்டுப்பாடு அல்லது மேற்பார்வை செய்வதிலிருந்து போலீசாரை உடனடியாக விலகிக்கொள்ள வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளின்படி மலையடிவாரம், பாதைகள், நெல்லித்தோப்பு, முன்புறம் மற்றும் பின்புற பாதை உட்பட மலையின் மீதுள்ள தனது சட்டப்பூர்வ உரிமைகளை நிலைநாட்ட அவற்றை கோயில் தேவஸ்தானம் மீட்க வேண்டும்.

போலீசார் சட்டப்பூர்வ அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டு செயல்பட, கோயில் சொத்தில் மூன்றாம் தரப்பினர் மதச்சார்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள், புனித மரங்கள், கட்டடங்கள், பாதைகள் மற்றும் ஹிந்து பக்தர்களின் மத உரிமைகளை பாதுகாக்க தேவஸ்தானம் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அருண்சுவாமிநாதன்: போலீஸ் பாதுகாப்புடன் சந்தனக்கூடு விழாவிற்கான கொடியேற்றம் நடந்தது. தர்கா கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. சட்டவிரோதமாக கோயிலுக்கு சொந்தமான கல்லத்திமரத்தில் கொடியேற்றப்பட்டது.

அரசு தரப்பு: சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் குறித்து இதுவரை எவ்வித புகாரும் இல்லை. குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக எந்த ஆவணமும் இல்லை. பதிலளிக்க அவகாசம் தேவை.

அருண்சுவாமிநாதன்: வீடியோ ஆதாரம் உள்ளது எனக்கூறி நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.

அதை பார்த்த நீதிபதி: இதற்கு அரசு தரப்பின் பதில் என்ன. கொடிமரத்தில் மட்டுமே கொடியேற்ற வேண்டும் என ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்லத்தி மரத்தில் கொடியேற்றியது ஏன். இவ்வாறு விவாதம் நடந்தது.

மதுரை போலீஸ் கமிஷனர், திருப்பரங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர், கோயில் அறங்காவலர் குழு தலைவர், செயல் அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டு ஜன., 6 க்கு ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us