sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

'வீக்' ஓட்டுச்சாவடிகளில் அதிக ஓட்டுகள்: தி.மு.க., - மா.செ.,க்களுக்கு 'டாஸ்க்'

/

'வீக்' ஓட்டுச்சாவடிகளில் அதிக ஓட்டுகள்: தி.மு.க., - மா.செ.,க்களுக்கு 'டாஸ்க்'

'வீக்' ஓட்டுச்சாவடிகளில் அதிக ஓட்டுகள்: தி.மு.க., - மா.செ.,க்களுக்கு 'டாஸ்க்'

'வீக்' ஓட்டுச்சாவடிகளில் அதிக ஓட்டுகள்: தி.மு.க., - மா.செ.,க்களுக்கு 'டாஸ்க்'

3


ADDED : மார் 21, 2026 06:22 AM

Google News

3

ADDED : மார் 21, 2026 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-நமது நிருபர் -

கடந்த தேர்தல்களில், தி.மு.க.,விற்கு 'வீக்' ஆக இருந்த ஓட்டுச்சாவடி பட்டியல் விபரங்களை மாவட்டச்செயலர்களிடம் கொடுத்து, அங்கு கூடுதல் ஓட்டுகளை பெற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தி.மு.க., மாவட்டச்செயலர்களுடன், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 16ம் தேதி சென்னையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சட்டசபை தொகுதிகள், அவற்றில் தி.மு.க., வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, கடந்த தேர்தல்களில் ஓட்டு சதவீதம் குறைவாக இருந்த ஓட்டுச்சாவடிகளின் பட்டியல், மாவட்டச் செயலர்களிடம் வழங்கப்பட்டு, அந்த ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, வரும் தேர்தலில் கூடுதல் ஓட்டுகளை பெற அறிவுறுத்தப்பட்டது.

இது குறித்து, தி.மு.க., வினர் கூறியதாவது: கடந்த 2021 சட்டசபை தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் ஆகியவற்றில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் பெற்ற ஓட்டுகள், அ.தி.மு.க., - பா.ஜ., நாம் தமிழர் கட்சி ஆகியவை பெற்ற ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு 'வீக்' ஆக இருந்த ஓட்டுச்சாவடிகள் ஆகிய விபரங்கள், உளவுத்துறை மற்றும் தி.மு.க.,வின், 'பென்' நிறுவனம் எடுத்த 'சர்வே' அடிப்படையில் பட்டியலிடப்பட்டன.

இதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதி வாரியாக, தி.மு.க., குறைவாக ஓட்டு பெற்ற ஓட்டுச் சாவடி பட்டியல், தி.மு.க., மாவட்டச்செயலர்களிடம் வழங்கப்பட்டன. வரும் தேர்தலில் அங்கு, தி.மு.க.,வுக்கு கூடுதல் ஓட்டுகளை பெற்றுத்தர வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையடுத்து, 'வீக்' ஆன ஓட்டுச்சாவடி பட்டியல், ஒன்றிய, நகர செயலர், தொகுதி பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டு, தீவிரமாக தேர்தல் பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us