sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

இமயமலை 'நீல சோலைபாடி' பள்ளிக்கரணைக்கு புதுவரவு

/

இமயமலை 'நீல சோலைபாடி' பள்ளிக்கரணைக்கு புதுவரவு

இமயமலை 'நீல சோலைபாடி' பள்ளிக்கரணைக்கு புதுவரவு

இமயமலை 'நீல சோலைபாடி' பள்ளிக்கரணைக்கு புதுவரவு


ADDED : ஏப் 08, 2024 12:20 AM

Google News

ADDED : ஏப் 08, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நீல சோலைபாடி, பழுப்பு மார்பு ஈபிடிப்பான் ஆகியவை புது வரவாக வந்துள்ளது பறவைகள் கணக்கெடுப்பில் உறுதியாகி உள்ளது.

சென்னையில் வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பரவி உள்ளது. இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட இடமாக வனத்துறை பராமரித்து வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், தமிழகம் வழியே இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் வலசை பறவைகள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வருவது வழக்கம். இந்த வகையில் இங்கு, 196 வகை பறவைகளின் வருகை ஆதாரப்பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை மாவட்ட வன அலுவலர் சரவணன் கூறுகையில், ''வலசை சீசன் முடியும் நிலையில் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் நிலபரப்பு பறவைகள் வருகை அதிகரித்துள்ளன. இது தொடர்பான விபரங்களை திரட்ட மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு தற்போது தான் முடிந்துள்ளது,'' என்றார்.

இது குறித்து, இங்கு பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டு வரும், 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:

பள்ளிக்கரணையில் தற்போது புது வரவாக, நீல சோலைபாடி, பழுப்பு மார்பு ஈபிடிப்பான் ஆகிய இரண்டு பறவைகள் இணைந்துள்ளன. இத்துடன் சேர்த்து இங்கு, 198 வகை பறவைகளின் வருகை ஆதாரப்பூர்வமாக உறுதியாகி உள்ளது.

இதில் நீல சோலைபாடி எனப்படும் பறவை இங்கு அரிதாக வந்துள்ளது.

இமயமலையை ஒட்டிய பகுதிகளில் இனப்பெருக்கம் மேற்கொள்ளும் வலசை பறவையான இது, இலங்கை செல்லும் வழியில் பள்ளிக்கரணை போன்ற இடங்களுக்கு வருகிறது.

இதே போன்று பழுப்பு மார்பு ஈ பிடிப்பான், தென் சீனா மற்றும் மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் காணப்படும். சிறு பூச்சிகளையே இது உணவாக எடுத்துக்கொள்ளும் என்பதால், நீர் நிலை மட்டுமல்லாது புதர் காடுகளில் தான் இது காணப்படும்.

இது மட்டுமல்லாது, நீல தொண்டை ஈ பிடிப்பான், செந்தலை பூங்குருவி, அரசவால் ஈ பிடிப்பான், கொண்டை குயில், பழுப்பு ஈ பிடிப்பான் போன்ற பறவைகளும் பள்ளிக்கரணையில் தற்போது முகாமிட்டுள்ளன.

நீர் நிலை மட்டுமல்லாது புதர்காடுகள் அடிப்படையிலும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் உயிர் சூழலில் முன்னேற்றம் இருப்பதை இது காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us