sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 நாங்கள் விசில் ஊதுபவர்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்? த.வெ.க., தலைவர் விஜய் கேள்வி

/

 நாங்கள் விசில் ஊதுபவர்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்? த.வெ.க., தலைவர் விஜய் கேள்வி

 நாங்கள் விசில் ஊதுபவர்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்? த.வெ.க., தலைவர் விஜய் கேள்வி

 நாங்கள் விசில் ஊதுபவர்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்? த.வெ.க., தலைவர் விஜய் கேள்வி

17


UPDATED : பிப் 24, 2026 05:55 AM

ADDED : பிப் 24, 2026 05:37 AM

Google News

17

UPDATED : பிப் 24, 2026 05:55 AM ADDED : பிப் 24, 2026 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''கொள்ளையடித்த பணத்தில் பங்கு கொடுத்து, கல்லாப்பெட்டி கூட்டணியை தி.மு.க., அமைத்திருக்கிறது,'' என த.வெ.க., தலைவர் விஜய் விமர்சித்தார்.



வேலுாரில் நேற்று நடந்த நிர்வாகிகள் சந்திப்பில் விஜய் பேசியதாவது: மக்களை நேசிக்கும் தலைமை இல்லை. இதனால் தான், ஸ்டாலினின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாறுகின்றனர். உங்களை ஊருக்கு வந்து சந்திக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. ஆனால், நமக்கு எதிராக பல சூழ்ச்சிகள் நடக்கின்றன.

த.வெ.க., ஆட்சி அமைந்த பின், ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரடியாக வந்து சந்திப்பேன். 'தமிழகம் - டில்லி இடையிலான தேர்தல் இது' என ஸ்டாலின் உருட்டுகிறார். பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போகிறாரா ஸ்டாலின்?

இந்த தேர்தல், மக்கள் - ஊழல் தி.மு.க., இடையிலான போர். சீரியஸாக போட்டி நடக்கும்போது, காமெடிக்கு நேரமில்லை. ஸ்டாலின் சொல்வது போல, இது 'சூப்பர் ஸ்டார்' மாநிலமல்ல; 'சூப்பர் ஸ்டாண்ட் அப் காமெடியன்' ஆட்சி நடக்கும் மாநிலம். மக்கள் என்னுடன் நிற்கும் கோபத்தில், ஒட்டுமொத்தமாக எல்லாரும் சேர்ந்து என்னை எதிர்க்கின்றனர்.

எதையாவது செய்து சிறுபான்மையினர் ஓட்டுகளை பெற, சிலர் பிரச்னைகளை கிளப்புகின்றனர். அரசியல் கட்சிகளும், தலைவர்களும் சில நேரங்களில் அமைதியாக இருந்தாலே எந்த பிரச்னையும் வராது.

'இந்த விஜய் எங்க போனாலும், சட்டம் - ஒழுங்கை பற்றியே பேசி, மக்களுக்கு ஞாபகப்படுத்துகிறான்' என முதல்வர் சொல்லி சங்கடப்பட்டுள்ளார். நாங்கள் விசில் ஊதுபவர்கள்; எப்படி அமைதியாக இருக்க முடியும்?

தி.மு.க.,வின் அடாவடிக்கு முடிவு கட்ட, 'சுவிட்ச் ஆப்' செய்யும் 'ரிமோட்' தான் இந்த தேர்தல். அறிவாலயம் பக்கம் யார் நடந்து போனாலும், நிழலுக்கு ஒதுங்கினாலும், கூட்டணியில் சேர்த்துக் கொள்கிறார் ஸ்டாலின்; கொள்ளையடித்த பணத்தில் பங்கும் கொடுக்கிறார். அதனால் தான் தி.மு.க., கூட்டணிக்கு, 'கல்லாப்பெட்டி கூட்டணி' என பெயர் வைத்திருக்கிறேன்.

அந்த கல்லாப்பெட்டி கூட்டணி இனி வெற்றி பெற முடியாது. விசில் புரட்சி செய்யும்; வரும் தேர்தலில், த.வெ.க., தான் வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

கண் கலங்கிய விஜய்!


''எல்லாரும் என் நண்பர்கள் என ஸ்டாலின் சொல்கிறார். பின்னர் ஏன் சார், கரூர் விஷயத்தில் என் மீது பழி போட்டீர்கள்? உங்களுக்கு மனசாட்சி இருந்தால், அப்படி பேசியிருப்பீர்களா? ஊழல், லஞ்சம், அரசியல் ஆதாயம் தான் ஸ்டாலினின் நண்பர்கள். என்னை அசிங்கமாக பேசினால், அது மக்களை சொல்வதாகத்தான் அர்த்தம். ''விஜயும் மக்களும், உடலும் உயிரும் மாதிரி. இதை பிரிக்க முடியாது. இது உணர்வுபூர்வமான உறவு,'' என கூறிய விஜய், சிறிது நேரம் கண் கலங்கினார்.



'அனுபவம் எல்லாம் ஒரு விஷயமே இல்லை'


வேலுார் கூட்டத்தில் விஜய் சொன்ன குட்டிக் கதை: மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள சாலையில், ஜல்லிக்கட்டு காளை ஒன்று சீறிக் கொண்டு நின்றது. அதை அடக்க, அனுபவமிக்க பலரும் முயன்று அடிபட்டு கிடக்கின்றனர். அந்த நேரத்தில், ஒரு சின்ன பையன் ஸ்டைலாக வந்தான். நம்மால் முடியாததை, 'இந்த சின்ன பையன் என்ன கிழிக்கப் போகிறான்' என்று சிலரும், 'அய்யோ பாவம் காளையிடம் தனியாக மாட்டி, அடி வாங்கப் போகிறான்' என சிலரும் ஏளனமாக பேசினர்.
ஆனால், அதை காதில் வாங்காமல் சீறிக் கொண்டு வந்த காளைக்கு, தன் பைக்குள் இருந்த புல்லுக்கட்டை எடுத்து நீட்டினான்; அந்த காளை குழந்தையாக மாறியது. அந்த பையனிடம், 'எப்படி இதை செய்தாய்' என ஒரு முதியவர் கேள்வி எழுப்ப, 'அந்த காளை கோபத்தில் இல்லை; பசியில் இருந்தது' என்றான் பையன்.
அனுபவம் எல்லாம் விஷயமே இல்லை. சூழலுக்கு ஏற்றவாறு என்ன செய்து பிரச்னையை தீர்க்கிறோம் என்பது தான் முக்கியம் என்ற அந்த பெரியவர், பையன் முதுகில் தட்டிக் கொடுத்தார். அந்த காளை தான் தமிழக அரசியல் களம். அந்த பெரியவர் தான் தமிழக மக்கள். அந்த சின்ன பையன் தான் த.வெ.க., இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us