தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி? பூத் ஏஜென்டுகளிடம் விசாரித்த ஸ்டாலின்

தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி? பூத் ஏஜென்டுகளிடம் விசாரித்த ஸ்டாலின்

தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி? பூத் ஏஜென்டுகளிடம் விசாரித்த ஸ்டாலின்

21


UPDATED : அக் 09, 2026 02:18 PM

ADDED : அக் 09, 2026 05:53 AM

Follow on GoogleFavourite on Google

21

UPDATED : அக் 09, 2026 02:18 PM ADDED : அக் 09, 2026 05:53 AM


21
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: இடைத்தேர்தல் நடந்த, இரண்டு தொகுதிகளில், தி.மு.க., 'பூத் ஏஜென்டு'களிடம், மொபைல் போனில் பேசிய, அக்கட்சி தலைவர் ஸ்டாலின், இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள், இன்று எண்ணப்படுகின்றன. த.வெ.க., வென்றால், ஆட்சி மீதான மக்கள் நம்பிக்கையை எடுத்து காட்டுவதாக அமையும். இதற்காக, முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள், தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

எதிர்க்கட்சிகள் தரப்பில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலர் உதயநிதி, முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகளும், இரு தொகுதிகளிலும் பிரசாரம் செய்தனர்.

இடைத்தேர்தலில், த.வெ.க., -தி.மு.க., -அ.தி.மு.க., -நா.த.க., மற்றும் கம்யூனிஸ்ட் என ஐந்து முனை போட்டி என்பதால், யாராக இருந்தாலும் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற முடியும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இரு தொகுதிகளிலும், தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை அறிந்து கொள்வதற்காக, அக்கட்சியின் 'பூத் ஏஜென்டு'களிடம் மொபைல்போன் வாயிலாக, அக்கட்சி தலைவர் ஸ்டாலின், பேசியுள்ளார்.

மதுராந்தகம் தொகுதியை சேர்ந்த, தி.மு.க., பூத் ஏஜென்டு ஒருவர் கூறியதாவது: தி.மு.க., பூத் ஏஜென்டுகளை, மொபைல்போனில், ஸ்டாலின், தொடர்பு கொண்டு, அந்தந்த பூத் ஏஜென்டின் பெயரை கூறி, உறுதி செய்த பின் பேசினார். தொடர்ந்து, ஒவ்வொருவரும் பணியாற்றிய ஓட்டுச்சாவடிகளில், எத்தனை ஓட்டுகள் உள்ளன; எத்தனை பதிவாகின என கேள்வி எழுப்பினார்.

மேலும், பதிவான ஓட்டுகளில், தி.மு.க.,வுக்கு எத்தனை ஓட்டுகள் கிடைக்கும்; தி.மு.க.,வுக்கு சாதகமா, பாதகமா; வெற்றி வாய்ப்பு எப்படி? என கேட்டார். எந்தெந்த பகுதிகளை சேர்ந்த, கட்சி நிர்வாகிகள், தேர்தல் பணியாற்றினர் என்ற விபரத்தையும் கேட்டறிந்தார்.

பூத் ஏஜென்டுகளுக்கு, தேவையான உணவு, செலவு உள்ளிட்டவற்றை, மாவட்ட செயலர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் செய்து கொடுத்தனரா எனவும் கேட்டதோடு, வெற்றி பெற்ற பின், நேரில் சந்திக்கலாம் எனவும் தெரிவித்தார். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us